தங்கம் விலையில் பெரிய சரிவு.. சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. நாளைக்கே உயரலாம்..!

தங்கம் விலை கடந்த 2 மாதங்கள் ரோலர் கோஸ்டர் ரைடில் இருப்பது போல் ஏறி இறங்கி வருகிறது, இந்த நிலையில் தங்கம் வாங்குவோர் விலை குறையும் போது வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது தான் தற்போதைய பரிந்துரை.

அடுத்த சில மாதத்தில் தங்கம் விலை பெரிய அளவில் உயரும் சூழ்நிலை இருந்தாலும், இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பல முக்கிய காரணத்தால் தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கிறது. நேற்றும், இன்றும் சீனா பொதுத்துறை வங்கிகள் தங்கம் வாங்குவதை குறைத்துக்கொள்ள முடிவு செய்ததன் காரணமாகத் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலையில் பெரிய சரிவு.. சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. நாளைக்கே உயரலாம்..!

ஆனால் இந்த சரிவு நாளை நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்பது தான் தற்போத சந்தை நிலவரங்கள் கூறுகிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் விலை உயரக்கூடும் என்பதால் தங்கம் வாங்குவோர் இன்றைய விலை சரிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கம் விலை ஏன் உயரப்போகிறது என்பதற்கான காரணத்தைச் செய்தியின் இறுதியில் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தகத்தில் 2384 டாலரில் இருந்து 2354 டாலர் வரையில் சரிந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் டாலர் மதிப்பு சரிவில் இருந்து தப்பிக்க தங்கம் மீதனா முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கி 11.15 மணியளவில் ஒரு அவுன்ஸ் 2367 டாலராக உள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஆகஸ்ட் மாதம் முடியும் பியூச்சர்ஸ் விலை 0.27 சதவீதம் அதிகரித்து 72,531 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.72 சதவீதம் அதிகரித்து 93,278.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 67,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் குறைந்து 73,850 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 67,700 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 500 ரூபாய் குறைந்து 99,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 440 ரூபாய் குறைந்து 26,980 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,770 ரூபாய், மும்பை - 6,710 ரூபாய், டெல்லி - 6,725 ரூபாய், கொல்கத்தா - 6,710 ரூபாய், பெங்களூர் - 6,710 ரூபாய், ஹைதராபாத் - 6,710 ரூபாய், கேரளா - 6,710 ரூபாய், புனே - 6,710 ரூபாய், பரோடா - 6,715 ரூபாய், அகமதாபாத் - 6,715 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,725 ரூபாய், லக்னோ - 6,725 ரூபாய், கோயம்புத்தூர் - 6,770 ரூபாய், மதுரை - 6,770 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,385 ரூபாய், மும்பை - 7,320 ரூபாய், டெல்லி - 7,335 ரூபாய், கொல்கத்தா - 7,320 ரூபாய், பெங்களூர் - 7,320 ரூபாய், ஹைதராபாத் - 7,320 ரூபாய், கேரளா - 7,320 ரூபாய், புனே - 7,320 ரூபாய், பரோடா - 7,325 ரூபாய், அகமதாபாத் - 7,325 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,335 ரூபாய், லக்னோ - 7,335 ரூபாய், கோயம்புத்தூர் - 7,385 ரூபாய், மதுரை - 7,385 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54160 ரூபாய், மும்பை - 53680 ரூபாய், டெல்லி - 53800 ரூபாய், கொல்கத்தா - 53680 ரூபாய், பெங்களூர் - 53680 ரூபாய், ஹைதராபாத் - 53680 ரூபாய், கேரளா - 53680 ரூபாய், புனே - 53680 ரூபாய், பரோடா - 53720 ரூபாய், அகமதாபாத் - 53720 ரூபாய், ஜெய்ப்பூர் - 53800 ரூபாய், லக்னோ - 53800 ரூபாய், கோயம்புத்தூர் - 54160 ரூபாய், மதுரை - 54160 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,980 ரூபாய் , மும்பை - 26,980 ரூபாய் , டெல்லி - 26,980 ரூபாய் , கொல்கத்தா - 26,980 ரூபாய் , பெங்களூர் - 26,980 ரூபாய் , ஹைதராபாத் - 26,980 ரூபாய் , கேரளா - 26,980 ரூபாய் , அகமதாபாத் - 26,980 ரூபாய் , ஜெய்ப்பூர் - 26,980 ரூபாய் , லக்னோ - 26,980 ரூபாய் , கோயம்புத்தூர் - 26,980 ரூபாய் , மதுரை - 26,980 ரூபாய் .

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99600 ரூபாய், மும்பை - 95100 ரூபாய், டெல்லி - 95100 ரூபாய், கொல்கத்தா - 95100 ரூபாய், பெங்களூர் - 93900 ரூபாய், ஹைதராபாத் - 99600 ரூபாய், கேரளா - 99600 ரூபாய், புனே - 95100 ரூபாய், பரோடா - 95100 ரூபாய், அகமதாபாத் - 95100 ரூபாய், ஜெய்ப்பூர் - 95100 ரூபாய், லக்னோ - 95100 ரூபாய், கோயம்புத்தூர் - 99600 ரூபாய், மதுரை - 99600 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.40 - 6,068 ரூபாய்
குவைத் - KWD 21.39 - 5,837 ரூபாய்
மலேசியா - MYR 351 - 6,219 ரூபாய்
ஓமன் - OMR 28.50 - 6,180 ரூபாய்
கத்தார் - QAR 269 - 6,159 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 273 - 6,077 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100.10 - 6,191 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 266.25 - 6,052 ரூபாய்
அமெரிக்கா - USD 72.50 - 6,053 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 266.25 - 6,052 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 266.25 - 6,052 ரூபாய்
துபாய் (UAE) - AED 266.25 - 6,052 ரூபாய்
புஜைரா (UAE) - AED 266.25 - 6,052 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 266.25 - 6,052 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 266.25 - 6,052 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 269 - 6,159 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 28.50 - 6,180 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 273 - 6,077 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.10 - 6,445 ரூபாய்
குவைத் - KWD 23.59 - 6,438 ரூபாய்
மலேசியா - MYR 367 - 6,503 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,506 ரூபாய்
கத்தார் - QAR 289 - 6,617 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,544 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.80 - 6,853 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 287.50 - 6,535 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,387 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 287.50 - 6,535 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 287.50 - 6,535 ரூபாய்
துபாய் (UAE) - AED 287.50 - 6,535 ரூபாய்
புஜைரா (UAE) - AED 287.50 - 6,535 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 287.50 - 6,535 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 287.50 - 6,535 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 289 - 6,617 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,506 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,544 ரூபாய்

தங்கம் விலை நாளை எப்படி இருக்கும்..?:

செவ்வாய்க்கிழமை ஐரோப்பியச் சந்தை வர்த்தகத்தில், அமெரிக்க டாலர் மதிப்பு குறைவதையொட்டி முதலீட்டாளர்கள் இதை எதிர்கொள்ளும் விதமாகத் தங்கம் மீது சர்வதேச அளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாகச் சீனாவின் முடிவுகளின் தாக்கம் மொத்தமாக மறைக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாகவே தங்கம் விலை ரீடைல் சந்தையில் குறைந்து காணப்பட்டாலும், சர்வதேசச் சந்தையிலும், எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. எனவே புதன்கிழமை ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, அதேபோல் அமெரிக்கச் சந்தையில் ஏதேனும் தடுமாற்றம் இருந்தால் தங்கம் விலை மந்தநிலைக்கோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+