தங்கம் விலை 300 ரூபாய் சரிவு.. தொடர்ந்து சரியுமா.. முக்கிய அறிவிப்பு..!!

தங்கம், இந்திய மிடில் கிளாஸ் மக்களின் முக்கியமான முதலீட்டுக் கருவி. மத்திய அரசு தங்கம் மீதான சுங்க வரியைக் குறைத்ததன் மூலம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் தங்கத்தை வாங்கக் கடைக்குப் படையெடுத்து வருகின்றனர். இதேவேளையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவதற்கான முக்கிய அறிவிப்பு நாளை இரவு வெளியாக உள்ளது, இதை எதிர்பார்த்துத் தான் உலக நாடுகள் மொத்தமும் காத்திருக்கிறது.

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் ஜூலை 30 ஆம் தேதி துவங்கி ஜூலை 31 ஆம் தேதி முடிய உள்ளது. இந்த 2 நாள் கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்காவிட்டாலும், செப்டம்பர் மாதம் வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

தங்கம் விலை 300 ரூபாய் சரிவு.. தொடர்ந்து சரியுமா.. முக்கிய அறிவிப்பு..!!

சந்தை கணிப்புகள் படி இந்தியாவில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு 2 முறை வட்டி விகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல் குறைப்பு செப்டம்பர் மாதம் நடக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. வட்டி விகிதம் குறைந்தால் பத்திர முதலீட்டு சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகள் வெளியேறும்.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க தேர்தல், இஸ்ரேல் - காசா போர் பதற்றம் ஆகியவை தங்கம் விலையைக் கட்டாயம் பாதிக்கும் முக்கிய காரணியாக உள்ளது. தற்போதைய நிலையில் பத்திர சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் பெரும்பாலும் பங்குச்சந்தையில் குவிகிறது. இதன் மூலம் சந்தையில் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு டிமாண்ட் குறைவாகவே உள்ளது தெரிகிறது. தற்போது சூழ்நிலை தொடர்ந்தால் தங்கம் விலை கூடுதலாகக் குறைய வாய்ப்புள்ளது.

சர்வதேசச் சந்தையில் நேற்று பதிவான சரிவில் இருந்து இன்று காலை வர்த்தகத்தில் மீண்டு ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2387 டாலராக உள்ளது. இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையின் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.15 சதவீதம் அதிகரித்து 68,728 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 0.37 சதவீதம் அதிகரித்து 81,584 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 63,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் குறைந்து 69,650 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை சனிக்கிழமை பதிவான உயர்வுக்குப் பின்பு 2வது நாளாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 300 ரூபாய் குறைந்து ரூ.63,850 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து, கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 89000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 190 ரூபாய் குறைந்து 25,570 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,385 ரூபாய், மும்பை - 6,320 ரூபாய், டெல்லி - 6,335 ரூபாய், கொல்கத்தா - 6,320 ரூபாய், பெங்களூர் - 6,320 ரூபாய், ஹைதராபாத் - 6,320 ரூபாய், கேரளா - 6,320 ரூபாய், புனே - 6,320 ரூபாய், பரோடா - 6,325 ரூபாய், அகமதாபாத் - 6,325 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,335 ரூபாய், லக்னோ - 6,335 ரூபாய், கோயம்புத்தூர் - 6,385 ரூபாய், மதுரை - 6,385 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,965 ரூபாய், மும்பை - 6,895 ரூபாய், டெல்லி - 6,910 ரூபாய், கொல்கத்தா - 6,895 ரூபாய், பெங்களூர் - 6,895 ரூபாய், ஹைதராபாத் - 6,895 ரூபாய், கேரளா - 6,895 ரூபாய், புனே - 6,895 ரூபாய், பரோடா - 6,900 ரூபாய், அகமதாபாத் - 6,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,910 ரூபாய், லக்னோ - 6,910 ரூபாய், கோயம்புத்தூர் - 6,965 ரூபாய், மதுரை - 6,965 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51080 ரூபாய், மும்பை - 50560 ரூபாய், டெல்லி - 50680 ரூபாய், கொல்கத்தா - 50560 ரூபாய், பெங்களூர் - 50560 ரூபாய், ஹைதராபாத் - 50560 ரூபாய், கேரளா - 50560 ரூபாய், புனே - 50560 ரூபாய், பரோடா - 50600 ரூபாய், அகமதாபாத் - 50600 ரூபாய், ஜெய்ப்பூர் - 50680 ரூபாய், லக்னோ - 50680 ரூபாய், கோயம்புத்தூர் - 51080 ரூபாய், மதுரை - 51080 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,570 ரூபாய், மும்பை - 25,570 ரூபாய், டெல்லி - 25,570 ரூபாய், கொல்கத்தா - 25,570 ரூபாய், பெங்களூர் - 25,570 ரூபாய், ஹைதராபாத் - 25,570 ரூபாய், கேரளா - 25,570 ரூபாய், அகமதாபாத் - 25,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,570 ரூபாய், லக்னோ - 25,570 ரூபாய், கோயம்புத்தூர் - 25,570 ரூபாய், மதுரை - 25,570 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89,000 ரூபாய், மும்பை - 84,500 ரூபாய், டெல்லி - 84,500 ரூபாய், கொல்கத்தா - 84,500 ரூபாய், பெங்களூர் - 84,500 ரூபாய், ஹைதராபாத் - 89,000 ரூபாய், கேரளா - 89,000 ரூபாய், புனே - 84,500 ரூபாய், பரோடா - 84,500 ரூபாய், அகமதாபாத் - 84,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 84,500 ரூபாய், லக்னோ - 84,500 ரூபாய், கோயம்புத்தூர் - 89,000 ரூபாய், மதுரை - 89,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,153 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,925 ரூபாய்
மலேசியா - MYR 352 - 6,373 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,274 ரூபாய்
கத்தார் - QAR 272 - 6,247 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 274 - 6,116 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,225 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 268 - 6,125 ரூபாய்
அமெரிக்கா - USD 73 - 6,113 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 268 - 6,125 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 268 - 6,125 ரூபாய்
துபாய் (UAE) - AED 268 - 6,125 ரூபாய்
புஜைரா (UAE) - AED 268 - 6,125 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 268 - 6,125 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 268 - 6,125 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 272 - 6,247 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,274 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 274 - 6,116 ரூபாய்


உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,531 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,478 ரூபாய்
மலேசியா - MYR 367 - 6,645 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,612 ரூபாய்
கத்தார் - QAR 290 - 6,660 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 295 - 6,585 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,867 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 290 - 6,617 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,447 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 290 - 6,617 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 290 - 6,617 ரூபாய்
துபாய் (UAE) - AED 290 - 6,617 ரூபாய்
புஜைரா (UAE) - AED 290 - 6,617 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 290 - 6,617 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 290 - 6,617 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 290 - 6,660 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,612 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 295 - 6,585 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+