தங்கம் விலை 'டமால்'.. சட்டுபுட்டுன்னு நகைக் கடைக்கு கிளம்புங்க..!!

உலகளாவிய சந்தையில் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை - ஏப்ரல் 22) ஆசிய வர்த்தகத்தின் துவக்கத்தில் கணிசமான சரிவைச் சந்தித்து வருகிறது சாமானிய மக்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஒரு அவுனஸ் தங்கம் விலை 2391 டாலரில் இருந்து 2363 டாலர் வரையில் குறைந்துள்ளது.

இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்து மக்கள் மனதைக் குளிர்வித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்றைய சரிவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை 'டமால்'.. சட்டுபுட்டுன்னு நகைக் கடைக்கு கிளம்புங்க..!!

இந்த நிலையில் தங்கம் விலை ஏன் சரிந்தது..? தங்கம் விலை தொடர்ந்து சரியுமா அல்லது மீண்டும் உயர வாய்ப்புகள் உள்ளதா..? இத்தகைய முக்கியமான கேள்விக்குப் பதிலைக் கட்டாயம் ஒவ்வொரு முதலீட்டாளரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய தங்கம் விலை சரிவுக்கு முதலும் முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கடுமையான கருத்துக்கள் தான். இவர்களுடைய முடிவின் எதிரொலியாகத் தங்கத்தின் விலை உயராமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றம், தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டுச் சாதனங்களின் மதிப்பை அதிகரிக்கக் கூடும் சூழ்நிலையும் உள்ளது.

ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள்: அமெரிக்காவில் இந்த ஆண்டு வட்டி விகிதங்கள் மாற்றாமல் வைத்திருக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அதாவது ஜூன் மாதம் உயர வேண்டிய வட்டி விகிதம் செப்டம்பர், அக்டோபரில் குறையும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு விலை குறையாது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜான் வில்லியம்ஸ் கடந்த வாரம் பேசுகையில், மேலும் ஒரு வட்டி விகித உயர்வு தனது அடிப்படை கணிப்பில் இல்லை என்று கூறினார். இதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு தேவைப்படுவதாகத் தரவுகள் சுட்டிக்காட்டினால், ஃபெடரல் ரிசர்வ் நிச்சயமாக அதைச் செய்ய விரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய கருத்துக்கு முக்கியமான காரணம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் தான், இதைவிட முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியிருக்கும் போர் பதற்றம் ஆகியவை பெரிய அளவிலான பாதிப்பைப் பணவீக்க கணிப்பில் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 ஆம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது.

பாதுகாப்பான முதலீடுகளின் தேவை: இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் பெரும் மோதல்களில் இருந்து தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது போல் தோன்றுகிறது. ஆனாலும் ஈரானில் அவ்வப்போது ஏதேனும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்க சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்கான புதிய இராணுவ உதவித் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் எதிர்காலம்: எவ்வாறாயினும், முதலீட்டாளர்கள் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைச் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலவும் பதற்றம் அதிகரித்தால், தங்கத்தின் விலை உயரும். இதனால் இன்றைய தங்கம் விலை சரிவு என்பது தற்காலிகமானது என கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+