இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால், நாட்டின் மொத்த தங்கத்தின் தேவையானது வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் சர்வதேச தங்கம் விலை மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும், ஆனால் மத்திய அரசின் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியாவில் தங்கம் விலை சர்வதேசச் சந்தைக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது
வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும், மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல் - காசா எல்லையில் அதிகரித்து வரும் பதற்றமும் காரணமாகத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சர்வதேசச் சந்தையில் உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து நாட்டு மக்களை மனம் குளிர வைத்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2386 டாலரில் இருந்து இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் 2400 டாலர் வரையில் உயர்ந்து மீண்டும் 2391 டாலர் வரையில் குறைந்துள்ளது. இந்த உயர்வு எம்சிஎக்ஸ் சந்தையில் எதிரொலித்துள்ளது, ஆனால் ரீடைல் சந்தையில் எதிரொலிக்கவில்லை என்பது தற்போது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரின் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.43 சதவீதம் உயர்ந்து 68,480 ரூபாயாக உள்ளது. இதுவே ஒரு கிலோ வெள்ளி விலை 0.87 சதவீதம் உயர்ந்து 82,075 ரூபாயாக உள்ளது.
ஆனால் ரீடைல் சந்தையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி 6% ஆகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக இருந்தது. இந்த வரியின் தாக்கம் இன்னும் ரீடைல் சந்தையில் முழுமையாக உள்வாங்காமல் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் குறைந்து 64,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் குறைந்து 69,980 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சனிக்கிழமை பதிவான 50 ரூபாய் உயர்வு திங்கட்கிழமை முழுமையாகக் குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 400 ரூபாய் குறைந்து 51,320 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 பைசாவும், ஒரு கிலோவுக்கு 500 ரூபாயும் உயர்ந்து 89,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 130 ரூபாய் உயர்ந்து 25,380 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,415 ரூபாய், மும்பை - 6,340 ரூபாய், டெல்லி - 6,355 ரூபாய், கொல்கத்தா - 6,340 ரூபாய், பெங்களூர் - 6,340 ரூபாய், ஹைதராபாத் - 6,340 ரூபாய், கேரளா - 6,340 ரூபாய், புனே - 6,340 ரூபாய், பரோடா - 6,345 ரூபாய், அகமதாபாத் - 6,345 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,355 ரூபாய், லக்னோ - 6,355 ரூபாய், கோயம்புத்தூர் - 6,415 ரூபாய், மதுரை - 6,415 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,998 ரூபாய், மும்பை - 6,916 ரூபாய், டெல்லி - 6,931 ரூபாய், கொல்கத்தா - 6,916 ரூபாய், பெங்களூர் - 6,916 ரூபாய், ஹைதராபாத் - 6,916 ரூபாய், கேரளா - 6,916 ரூபாய், புனே - 6,916 ரூபாய், பரோடா - 6,921 ரூபாய், அகமதாபாத் - 6,921 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,931 ரூபாய், லக்னோ - 6,931 ரூபாய், கோயம்புத்தூர் - 6,998 ரூபாய், மதுரை - 6,998 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51320 ரூபாய், மும்பை - 50720 ரூபாய், டெல்லி - 50840 ரூபாய், கொல்கத்தா - 50720 ரூபாய், பெங்களூர் - 50720 ரூபாய், ஹைதராபாத் - 50720 ரூபாய், கேரளா - 50720 ரூபாய், புனே - 50720 ரூபாய், பரோடா - 50760 ரூபாய், அகமதாபாத் - 50760 ரூபாய், ஜெய்ப்பூர் - 50840 ரூபாய், லக்னோ - 50840 ரூபாய், கோயம்புத்தூர் - 51320 ரூபாய், மதுரை - 51320 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,380 ரூபாய், மும்பை - 25,380 ரூபாய், டெல்லி - 25,380 ரூபாய், கொல்கத்தா - 25,380 ரூபாய், பெங்களூர் - 25,380 ரூபாய், ஹைதராபாத் - 25,380 ரூபாய், கேரளா - 25,380 ரூபாய், அகமதாபாத் - 25,380 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,380 ரூபாய், லக்னோ - 25,380 ரூபாய், கோயம்புத்தூர் - 25,380 ரூபாய், மதுரை - 25,380 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89,500 ரூபாய், மும்பை - 85,000 ரூபாய், டெல்லி - 85,000 ரூபாய், கொல்கத்தா - 85,000 ரூபாய், பெங்களூர் - 84,000 ரூபாய், ஹைதராபாத் - 89,500 ரூபாய், கேரளா - 89,500 ரூபாய், புனே - 85,000 ரூபாய், பரோடா - 85,000 ரூபாய், அகமதாபாத் - 85,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 85,000 ரூபாய், லக்னோ - 85,000 ரூபாய், கோயம்புத்தூர் - 89,500 ரூபாய், மதுரை - 89,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28 - 6,175 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,952 ரூபாய்
மலேசியா - MYR 352 - 6,366 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,296 ரூபாய்
கத்தார் - QAR 272 - 6,257 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 274 - 6,115 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,234 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 268 - 6,115 ரூபாய்
அமெரிக்கா - USD 73 - 6,112 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 268 - 6,115 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 268 - 6,115 ரூபாய்
துபாய் (UAE) - AED 268 - 6,115 ரூபாய்
புஜைரா (UAE) - AED 268 - 6,115 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 268 - 6,115 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 268 - 6,115 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 272 - 6,257 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,296 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 274 - 6,115 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 30 - 6,553 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,492 ரூபாய்
மலேசியா - MYR 367 - 6,637 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,622 ரூபாய்
கத்தார் - QAR 290 - 6,670 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 295 - 6,583 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,877 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 290 - 6,605 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,447 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 290 - 6,605 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 290 - 6,605 ரூபாய்
துபாய் (UAE) - AED 290 - 6,605 ரூபாய்
புஜைரா (UAE) - AED 290 - 6,605 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 290 - 6,605 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 290 - 6,605 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 290 - 6,670 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,622 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 295 - 6,583 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications