தங்கம் விலை இந்தியாவில் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் குறைந்துள்ளது, பட்ஜெட் அறிவிப்பு இதன் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் இந்த தொடர் சரிவு சேமிப்புக்காகத் தங்கம் வாங்குவோருக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவில் தங்கத்தை வெறும் நகையாகப் பார்ப்பது தாண்டி பிள்ளைகளின் கல்வி செலவு, அவரச நிதிக்காக ஆதாரம், மருத்துவச் செலவு, சொந்த வீடு என எதிர்கால தேவைக்காக முதலீடு செய்யப்படும் ஒரு கருவி.
நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நகையின் மூலம் ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே வாங்கப்பட்டு இருக்கும். இதுதான் நம்ம ஊர் பெண்களின் புத்திசாலித்தனம், ஒவ்வொரு வீட்டிலும் மோசமான நிதி நிலை அல்லது அவசர நிதி தேவை வரும் போது பெண்கள் தான் அதை கையாளுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் தங்கம் முக்கிய கருவியாக செயல்படுகிறது.

இப்படிப்பட்ட தங்கம் விலை 7 நாட்களில் தொடர்ந்து குறைந்தால் விட்டுவைப்பார்களா, இந்தியா முழுவதும் மக்கள் தற்போது நகைக்கடைகளுக்கு அலைமோதத் துவங்கியுள்ளனர்.கடந்த 7 நாட்களில் அதாவது ஜூலை 18ஆம் தேதியில் இருந்து 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 499 ரூபாய் ரீடைல் சந்தையில் குறைந்துள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் என்றால் ஒரு கிராமுக்கு 534 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் குறைந்து 64,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் குறைந்து 70,150 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 480 ரூபாய் குறைந்து 51,440 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாயும், கிலோவுக்கு 3000 ரூபாய் குறைந்து 89,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 230 ரூபாய் குறைந்து 25,290 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,430 ரூபாய், மும்பை - 6,400 ரூபாய், டெல்லி - 6,415 ரூபாய், கொல்கத்தா - 6,400 ரூபாய், பெங்களூர் - 6,400 ரூபாய், ஹைதராபாத் - 6,400 ரூபாய், கேரளா - 6,400 ரூபாய், புனே - 6,400 ரூபாய், பரோடா - 6,405 ரூபாய், அகமதாபாத் - 6,405 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,415 ரூபாய், லக்னோ - 6,415 ரூபாய், கோயம்புத்தூர் - 6,430 ரூபாய், மதுரை - 6,430 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,015 ரூபாய், மும்பை - 6,982 ரூபாய், டெல்லி - 6,995 ரூபாய், கொல்கத்தா - 6,982 ரூபாய், பெங்களூர் - 6,982 ரூபாய், ஹைதராபாத் - 6,982 ரூபாய், கேரளா - 7,085 ரூபாய், புனே - 6,982 ரூபாய், பரோடா - 6,985 ரூபாய், அகமதாபாத் - 6,985 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,995 ரூபாய், லக்னோ - 6,995 ரூபாய், கோயம்புத்தூர் - 7,015 ரூபாய், மதுரை - 7,015 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51440 ரூபாய், மும்பை - 51200 ரூபாய், டெல்லி - 51320 ரூபாய், கொல்கத்தா - 51200 ரூபாய், பெங்களூர் - 51200 ரூபாய், ஹைதராபாத் - 51200 ரூபாய், கேரளா - 51200 ரூபாய், புனே - 51200 ரூபாய், பரோடா - 51240 ரூபாய், அகமதாபாத் - 51240 ரூபாய், ஜெய்ப்பூர் - 51320 ரூபாய், லக்னோ - 51320 ரூபாய், கோயம்புத்தூர் - 51440 ரூபாய், மதுரை - 51440 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89,000 ரூபாய், மும்பை - 84,500 ரூபாய், டெல்லி - 84,500 ரூபாய், கொல்கத்தா - 84,500 ரூபாய், பெங்களூர் - 84,500 ரூபாய், ஹைதராபாத் - 89,000 ரூபாய், கேரளா - 89,000 ரூபாய், புனே - 84,500 ரூபாய், பரோடா - 84,500 ரூபாய், அகமதாபாத் - 84,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 84,500 ரூபாய், லக்னோ - 84,500 ரூபாய், கோயம்புத்தூர் - 89,000 ரூபாய், மதுரை - 89,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,261 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,924 ரூபாய்
மலேசியா - MYR 354 - 6,350 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,240 ரூபாய்
கத்தார் - QAR 271 - 6,221 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 277 - 6,180 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 99 - 6,190 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 266 - 6,073 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,194 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 266 - 6,073 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 266 - 6,073 ரூபாய்
துபாய் (UAE) - AED 266 - 6,073 ரூபாய்
புஜைரா (UAE) - AED 266 - 6,073 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 266 - 6,073 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 266 - 6,073 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 271 - 6,221 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,240 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 277 - 6,180 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,661 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,460 ரூபாய்
மலேசியா - MYR 366 - 6,565 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,577 ரூபாய்
கத்தார் - QAR 289 - 6,634 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 299 - 6,671 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,831 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 288 - 6,558 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,571 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 288 - 6,558 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 288 - 6,558 ரூபாய்
துபாய் (UAE) - AED 288 - 6,558 ரூபாய்
புஜைரா (UAE) - AED 288 - 6,558 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 288 - 6,558 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 288 - 6,558 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 289 - 6,634 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,577 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 299 - 6,671 ரூபாய்


Click it and Unblock the Notifications