ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வரும் போது தங்கம் விலை பெரிய அளவில் உயரும் என்பது பலருக்கும் தெரியும், நமக்குத் தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, அறுசுவை உணவு, அசைவம் என்பது தான் பிரதானமாக இருக்கும். ஆனால் வட இந்தியாவில் தீபாவளிக்கு முன்பு தந்தேராஸ் என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது, இந்த பண்டிகையின் போது தங்கம் வாங்குவது வட இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கமாக உள்ளது.
இதனாலேயே தங்கம் விலை ஒவ்வொரு வருடம் தீபாவளி பண்டிகையின் போது உள்நாட்டில் அதிகரிக்கும் டிமாண்ட் காரணமாக விலை உயர்வும். இந்த நேரத்தில் சர்வதேசச் சந்தையின் தாக்கம் காரணமாக விலை குறைத்தால் விலை உயர்வின் அளவு குறைவது வழக்கம். இதேபோல் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெரிய அளவில் உயரும்.

ஆனால் தற்போது சற்று மாறியுள்ளது, இந்தியாவில் தங்கம் விலை உச்சக்கட்ட நிலையில் இருக்கும் காரணத்தால் மக்கள் தங்கம் வாங்குவதைக் கைவிடுவார்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் அமெரிக்கத் தேர்தலுக்கு மத்தியில் அடித்த வட்டி குறைப்பு மிகவும் குறைவாக இருக்கும் என கணிப்புகள் வந்துள்ள காரணத்தால், வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் மீண்டும் அமெரிக்க பத்திர சந்தையில் முதலீடுகள் குவிந்து அதன் லாப அளவீடுகள் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைய துவங்கியுள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் குறைந்து 73,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் குறைந்து 79,800 ரூபாயாக சரிந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து 58,520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை இன்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான 1,07,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 200 ரூபாய் குறைந்து 27,460 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை அக்டோபர் மாதம் மட்டும் 3.76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் அக்டோபர் மாதம் தங்கம் விலை அதிகப்படியாக 7025 ரூபாயில் இருந்து 7360 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதுவே 24 கேரட் தங்கம் விலையை பார்க்கும் போது 7664 ரூபாயில் இருந்து 8029 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications