சர்வதேச சந்தையில் தங்கம் விலையும், பிட்காயின் விலையும் மார்ச் மாதம் தாறுமாறாக உயர்ந்த வேளையில் பெரும் முதலீட்டாளர்கள் கூட்டத்தைத் தடம் மாற்றியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் சர்வதேச சந்தையில் நடந்த மாற்றம் தங்கம் விலையை மட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி விலையைக் குறைத்துள்ளது.
இந்த வாரம் சர்வதேச நாணய சந்தையில், உலக முதன்மை நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வரும் காரணமாக, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2192 டாலரில் இருந்து 2155 டாலருக்கு குறைந்துள்ளது.

இதேபோல் நீண்ட காலத்திற்குப் பின்பு உயர்ந்த பிட்காயின் மார்ச் 14 ஆம் தேதி 73,750.07 டாலர் வரையில் உயர்ந்தது, ஆனால் கடந்த 2 நாட்களில் பிட்காயின் விலை 65,630.69 டாலர் வரையில் சரிந்து தற்போது 1.12 சதவீத உயர்வுடன் $69,400.75 வர்த்தகமாகிறது.
அமெரிக்காவின் பணவீக்க விகிதம் (CPI data) மற்றும் உற்பத்தியாளர் விலை குறியீடு (PPI) எதிர்பார்க்கப்பட்டது விட அதிகமாக இருந்ததன் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து.
இதன் எதிரொலியாக MCX சந்தையில் 10 கிராம் தங்கம் புதிய உச்சமான 66,356 ரூபாய் அளவீட்டைத் தொட்ட பிறகு, முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் பொருட்டு (profit booking) அதிகளவிலான தங்கத்தை விற்பனை செய்து விலை சரிய வழி வகுத்துள்ளது.
இதன் வாயிலாக ஏப்ரல் 2024 முடியும் MCX தங்க ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முடிவில் 65,545 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது, இது சமீபத்தில் பதிவான புதிய உச்சத்திலிருந்து 800 ரூபாய்க்கும் குறைவாகும்.
தங்க விலையில் இந்த சரிவு என்பது லாபம் பறிக்கும் நடவடிக்கையே ஆகும், இது அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்த பிறகு தங்கம் அதிகளவில் விற்கப்பட்டது. தற்போது MCX தங்க விலை 64,300 முதல் 66,000 வரையிலான வரம்பில் உள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் டாலர் மதிப்பு பொறுத்து தங்கம் விலை மாறுபடும்.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!



Click it and Unblock the Notifications