பிற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது காலம் காலமாக நம் நாட்டு மக்களிடையே இருக்கும் இயல்பான வழக்கம். இது போன்ற நபர்களுக்கு பட்ஜெட் அறிவிப்பு ஸ்வீட் சாப்பிடுவது போல் இனிப்பான விஷயமாக மாறியது. அதற்கான காரணம் பட்ஜெட்டில் வெளியான சுங்கவரி குறைப்பு. சுங்க கட்டணம் குறைந்ததால் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படும், இதனால் சந்தையில் இருப்பு அதிகரித்து விலை குறைந்தது. சுங்கவரி குறைப்பு காரணமாக மட்டும் இந்தியாவில் தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் வரை குறைந்தது.
இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,450 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கம் 1 கிராம் விலை ரூ. 7,036 ஆகவும் உள்ளது.

கடந்த மாதம் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. இந்த சரிவு ஜூலை 30-ஆம் தேதியோடு முடிவடைந்தது. அன்று மட்டும் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,385 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,965 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஜூலை மாதத்திலேயே மிகவும் விலை குறைந்து காணப்பட்டது ஜூலை 30-ஆம் தேதி அன்று மட்டுமே. அதே போல ஜூலை மாதத்தில், ஜூலை 17-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை உச்சத்துக்கு சென்றது. ஜூலை 17 அன்று, 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,920 ரூபாயாகவும், ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7, 549 ரூபாயாகவும் இருந்தது.
ஜூலை 31-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. நேற்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 30 ரூபாய் அதிகரித்து 6,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதிலிருந்து 10 ரூபாய் குறைந்து 6,450 ரூபாயாக குறைந்துள்ளது.
இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,450 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,036 ஆகவும் உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 51,600 ரூபாயாகவும், 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 56,288 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications