தங்கம் விலை எப்படா குறையும், எப்படா வாங்குவது என சரியான நேரத்தை தேடி எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவருக்கும் இன்று ஒரு குட்நியூஸ் கிடைத்துள்ளது. அமெரிக்க பொருளாதார தரவுகள் பெரும் தாக்கத்தைச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பொருளாதார தரவுகள் மூலம் அந்நாட்டின் பணவீக்கம் குறைய வாய்ப்புகள் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் வேளையில், வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது. இதனால் பெரும் முதலீடு பங்குச்சந்தை பக்கம் செல்ல துவங்கியுள்ளது, பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவோர் பத்திர சந்தைக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.

இதன் விளைவு தங்கம் விலையில் குறைய துவங்கியுள்ளது, இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு 30 ரூபாய் வரையில் குறைந்து முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2337 டாலரில் இருந்து 2324 டாலர் வரையில் குறைந்துள்ளது.
மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ஜூன் மாத ஆர்டர் விலை 0.20 சதவீதம் சரிந்து 71,360 ரூபாயாக குறைந்துள்ளது, வெள்ளி விலை 0.03 சதவீதம் சரிந்து 82,475.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 67,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 320 ரூபாய் குறைந்து 73,530 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 53,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 87,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 90 ரூபாய் உயர்ந்து 24ஸ570 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,400 ரூபாய், மும்பை - 66,550 ரூபாய், டெல்லி - 66,700 ரூபாய், கொல்கத்தா - 66,550 ரூபாய், பெங்களூர் - 66,550 ரூபாய், ஹைதராபாத் - 66,550 ரூபாய், கேரளா - 66,550 ரூபாய், புனே - 66,550 ரூபாய், பரோடா - 66,600 ரூபாய், அகமதாபாத் - 66,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,700 ரூபாய், லக்னோ - 66,700 ரூபாய், கோயம்புத்தூர் - 67,400 ரூபாய், மதுரை - 67,400 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,530 ரூபாய், மும்பை - 72,600 ரூபாய், டெல்லி - 72,750 ரூபாய், கொல்கத்தா - 72,600 ரூபாய், பெங்களூர் - 72,600 ரூபாய், ஹைதராபாத் - 72,600 ரூபாய், கேரளா - 72,600 ரூபாய், புனே - 72,600 ரூபாய், பரோடா - 72,650 ரூபாய், அகமதாபாத் - 72,650 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,750 ரூபாய், லக்னோ - 72,750 ரூபாய், கோயம்புத்தூர் - 73,530 ரூபாய், மதுரை - 73,530 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53920 ரூபாய், மும்பை - 53240 ரூபாய், டெல்லி - 53360 ரூபாய், கொல்கத்தா - 53240 ரூபாய், பெங்களூர் - 53240 ரூபாய், ஹைதராபாத் - 53240 ரூபாய், கேரளா - 53240 ரூபாய், புனே - 53240 ரூபாய், பரோடா - 53280 ரூபாய், அகமதாபாத் - 53280 ரூபாய், ஜெய்ப்பூர் - 53360 ரூபாய், லக்னோ - 53360 ரூபாய், கோயம்புத்தூர் - 53920 ரூபாய், மதுரை - 53920 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,570 ரூபாய், மும்பை - 24,570 ரூபாய், டெல்லி - 24,570 ரூபாய், கொல்கத்தா - 24,570 ரூபாய், பெங்களூர் - 24,570 ரூபாய், ஹைதராபாத் - 24,570 ரூபாய், கேரளா - 24,570 ரூபாய், அகமதாபாத் - 24,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,570 ரூபாய், லக்னோ - 24,570 ரூபாய், கோயம்புத்தூர் - 24,570 ரூபாய், மதுரை - 24,570 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87500 ரூபாய், மும்பை - 84000 ரூபாய், டெல்லி - 84000 ரூபாய், கொல்கத்தா - 84000 ரூபாய், பெங்களூர் - 83500 ரூபாய், ஹைதராபாத் - 87500 ரூபாய், கேரளா - 87500 ரூபாய், புனே - 84000 ரூபாய், பரோடா - 84000 ரூபாய், அகமதாபாத் - 84000 ரூபாய், ஜெய்ப்பூர் - 84000 ரூபாய், லக்னோ - 84000 ரூபாய், கோயம்புத்தூர் - 87500 ரூபாய், மதுரை - 87500 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications