இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் நாட்டின் மொத்த தேவையும் வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாகத் தங்கத்தின் விலையும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்ப இந்தியாவில் மாறுகிறது. இதோடு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு டாலரில் பணம் செலுத்தப்படும் காரணத்தாலும், மத்திய அரசு விதிக்கும் வரிகளாலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இப்படியிருக்கையில் கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் PMI குறியீடு தங்கம் விலையைப் பெரிய அளவில் குறைக்க வழி வகுத்தது. அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் PMI குறியீடு வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இதன் எதிரொலியாகத் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி பத்திர சந்தைக்கும், பங்குச்சந்தையிலும் குவிந்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது, தற்போதைய சூழ்நிலையில் தங்கம் விலை உயர இஸ்ரேல் - காசா, ரஷ்யா - உக்ரைன் மற்றும் தொழிற்துறையில் தங்கத்திற்கான டிமாண்ட் ஆகியவை மட்டுமே இதன் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
எனவே தங்கம் மீது பெரும் தொகையை முதலீடு செய்ய விரும்புவோர் அடுத்த சில வாரத்திற்கு அமெரிக்க வட்டி விகிதம் உட்பட இந்த 3 காரணிகளையும் ஆய்வு செய்து தங்கத்தை வாங்குவது உத்தமம். தற்போதைய சூழ்நிலையில் தங்கம் விலை குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, எனவே காத்திருந்து லாபம் பெறுங்கள். அதேபோல் தங்கத்தை விற்பனை செய்தோ, அல்லது அடகு வைத்தோ நிதி திரட்டுவோருக்கு குறைவான பணமே கிடைக்கும்.
சர்வதேச சந்தையில் நேற்று 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று 2332 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 2323 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதே வேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.24 சதவீதம் சரிந்து 71,620 ரூபாயாக உள்ளது, அதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.06 சதவீதம் சரிந்து 88,947 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 66,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 72,880 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 53,440 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 95,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 330 ரூபாய் குறைந்து 26860 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,680 ரூபாய், மும்பை - 6,625 ரூபாய், டெல்லி - 6,640 ரூபாய், கொல்கத்தா - 6,625 ரூபாய், பெங்களூர் - 6,625 ரூபாய், ஹைதராபாத் - 6,625 ரூபாய், கேரளா - 6,625 ரூபாய், புனே - 6,625 ரூபாய், பரோடா - 6,630 ரூபாய், அகமதாபாத் - 6,630 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,640 ரூபாய், லக்னோ - 6,640 ரூபாய், கோயம்புத்தூர் - 6,680 ரூபாய், மதுரை - 6,680 ரூபாய் .
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,288 ரூபாய், மும்பை - 7,223 ரூபாய், டெல்லி - 7,238 ரூபாய், கொல்கத்தா - 7,223 ரூபாய், பெங்களூர் - 7,223 ரூபாய், ஹைதராபாத் - 7,223 ரூபாய், கேரளா - 7,223 ரூபாய், புனே - 7,223 ரூபாய், பரோடா - 7,228 ரூபாய், அகமதாபாத் - 7,228 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,238 ரூபாய், லக்னோ - 7,238 ரூபாய், கோயம்புத்தூர் - 7,288 ரூபாய், மதுரை - 7,288 ரூபாய் .
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53440 ரூபாய், மும்பை - 53000 ரூபாய், டெல்லி - 53120 ரூபாய், கொல்கத்தா - 53000 ரூபாய், பெங்களூர் - 53000 ரூபாய், ஹைதராபாத் - 53000 ரூபாய், கேரளா - 53000 ரூபாய், புனே - 53000 ரூபாய், பரோடா - 53040 ரூபாய், அகமதாபாத் - 53040 ரூபாய், ஜெய்ப்பூர் - 53120 ரூபாய், லக்னோ - 53120 ரூபாய், கோயம்புத்தூர் - 53440 ரூபாய், மதுரை - 53440 ரூபாய் .
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,860 ரூபாய், மும்பை - 26,860 ரூபாய், டெல்லி - 26,860 ரூபாய், கொல்கத்தா - 26,860 ரூபாய், பெங்களூர் - 26,860 ரூபாய், ஹைதராபாத் - 26,860 ரூபாய், கேரளா - 26,860 ரூபாய், அகமதாபாத் - 26,860 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,860 ரூபாய், லக்னோ - 26,860 ரூபாய், கோயம்புத்தூர் - 26,860 ரூபாய், மதுரை - 26,860 ரூபாய் .
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 95500 ரூபாய், மும்பை - 91000 ரூபாய், டெல்லி - 91000 ரூபாய், கொல்கத்தா - 91000 ரூபாய், பெங்களூர் - 91050 ரூபாய், ஹைதராபாத் - 95500 ரூபாய், கேரளா - 95500 ரூபாய், புனே - 91000 ரூபாய், பரோடா - 91000 ரூபாய், அகமதாபாத் - 91000 ரூபாய், ஜெய்ப்பூர் - 91000 ரூபாய், லக்னோ - 91000 ரூபாய், கோயம்புத்தூர் - 95500 ரூபாய், மதுரை - 95500 ரூபாய் .
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.10 - 5,998 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,987 ரூபாய்,
மலேசியா - MYR 347 - 6,150 ரூபாய்,
ஓமன் - OMR 27.80 - 6,024 ரூபாய்,
கத்தார் - QAR 265.50 - 6,076 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 267 - 5,937 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.10 - 6,051 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 261 - 5,928 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,923 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 261 - 5,928 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 261 - 5,928 ரூபாய்,
துபாய் (UAE) - AED 261 - 5,928 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 261 - 5,928 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 261 - 5,928 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 261 - 5,928 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 265.50 - 6,076 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.80 - 6,024 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 267 - 5,937 ரூபாய் .
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.80 - 6,374 ரூபாய்,
குவைத் - KWD 23.35 - 6,354 ரூபாய்,
மலேசியா - MYR 362 - 6,416 ரூபாய்,
ஓமன் - OMR 29.65 - 6,425 ரூபாய்,
கத்தார் - QAR 283 - 6,477 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 288 - 6,404 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.80 - 6,711 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.75 - 6,400 ரூபாய்,
அமெரிக்கா - USD 75 - 6,257 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 281.75 - 6,400 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 281.75 - 6,400 ரூபாய்,
துபாய் (UAE) - AED 281.75 - 6,400 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 281.75 - 6,400 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.75 - 6,400 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 281.75 - 6,400 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 283 - 6,477 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.65 - 6,425 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,404 ரூபாய் .
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க



Click it and Unblock the Notifications