சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்ததும் டிரம்ப் ஆட்சியில் டாலர் மதிப்பும் பத்திர முதலீடுகளும் பெரிய அளவிலான லாபத்தை அளிக்கும் என முதலீட்டாளர்கள் நம்பும் காரணத்தால் தங்கம் விலை புதன்கிழமை சர்வதேச வர்த்தகத்தில் தடாலடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று இந்திய ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 179 ரூபாய் குறைந்து 7856 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது, இதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 165 ரூபாய் குறைந்து 7200 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை சுமார் 1320 ரூபாய் குறைந்து 57,600 ரூபாயாகக் குறைந்து 58000 அளவீட்டை தகர்த்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்க விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்ததோடு, வியாழக்கிழமை பெரும் சரிவைக் கண்டது. அமெரிக்காவில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால், அமெரிக்க டாலர் எப்போதும் இல்லாத வகையில் பலம் அடைந்ததுள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் இருந்து ரெசிஷன் அச்சம் மொத்தமாக மறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக அதன் ஆதிக்கத்தை இழந்து வந்த நிலையில், டிரம்ப்-ன் வெற்றி புதிய மாற்றத்தை 24 மணிநேரத்தில் கொண்டு வந்துள்ளது. தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க முக்கியமான காரணமாக இருப்பது பொருளாதார நிச்சயமற்ற தன்மை தான். டிரம்ப் வெற்றிக்கு பின்பு இது மொத்தமாக மாறியுள்ளது.
இதன் எதிரொலியாகவே டாலர் மதிப்பில் செங்குத்தான வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. டாலர் மதிப்பு உயர்ந்த போதிலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரும் சரிவை சந்தத்திற்கும் காரணத்தால் தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. டிரம்ப் வெற்றி பின்பு முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான முதலீடுகளான தேவை இல்லை என்பதாலேயே தங்கம் மீதான தேவை குறைந்துள்ளது காட்டுகிறது.
இதற்கிடையே, அமெரிக்க மத்திய வங்கியான பெரடரல் ரிசர்வ் வியாழக்கிழமை தனது இரு நாள் கூட்டத்தின் முடிவுகளை வெளியிட உள்ளது, இக்கூட்டத்தில் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25% குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்குச்சந்தைக்குப் பெரு வாய்ப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications