சர்வதேச அரங்கில் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றங்கள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, தங்க விலை திங்கள்கிழமையை தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் தீவிரமாகச் சரிவைச் சந்தித்தது. கடந்த வாரம் பதிவான உச்ச நிலையில் இருந்து தங்க விலை 2.5% க்கும் மேல் சரிந்துள்ளது.
தங்கம் விலை உயர்வு எப்படி ஒரு பெரும் மக்கள் கூட்டத்திற்கு நன்மை அளிக்கிறதோ, அதேபோல் தங்கம் விலை சரிவு நாட்டின் பெரும் பகுதி மக்களுக்கு நன்மை அளிக்கிறது. தங்கத்தை முக்கிய நிகழ்வுக்காக வாங்கக் காத்திருப்போருக்குத் தொடர்ந்து 2 நாள் விலை சரிவு என்பது ரஜினிகாந்த் சந்திரமுகி-யை பார்த்து சாதித்த உணர்வில் தான் இருக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தக துவக்கத்தில் 2392 டாலராக இருந்தது, ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் 2302 டாலராக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 24 மணிநேரத்தில் 90 டாலர் குறைந்துள்ளது. தற்போதைய சந்தை சூழ்நிலையில், தங்கத்தை வாங்கியவர்கள் அனைவரும் அதை திருப்பி விற்பனை செய்து லாபம் பார்க்கும் படலத்தில் உள்ளனர்.
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.12 சதவீதம் சரிந்து 70,401 ரூபாயாக உள்ளது. இதுவே ஒரு கிலோ வெள்ளி விலை 1.01 சதவீதம் சரிந்து 79,765 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1450 ரூபாய் குறைந்கு 67,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1570 ரூபாய் குறைந்து 73,100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 1160 ரூபாய் குறைந்து 53,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 2500 ரூபாய் குறைந்து 86500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 620 ரூபாய் குறைந்து 24,380 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67,000 ரூபாய், மும்பை - 66,150 ரூபாய், டெல்லி - 66,300 ரூபாய், கொல்கத்தா - 66,150 ரூபாய், பெங்களூர் - 66,150 ரூபாய், ஹைதராபாத் - 66,150 ரூபாய், கேரளா - 66,150 ரூபாய், புனே - 66,150 ரூபாய், பரோடா - 66,200 ரூபாய், அகமதாபாத் - 66,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,300 ரூபாய், லக்னோ - 66,300 ரூபாய், கோயம்புத்தூர் - 67,000 ரூபாய், மதுரை - 67,000 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73,100 ரூபாய், மும்பை - 72,160 ரூபாய், டெல்லி - 72,310 ரூபாய், கொல்கத்தா - 72,160 ரூபாய், பெங்களூர் - 72,160 ரூபாய், ஹைதராபாத் - 72,160 ரூபாய், கேரளா - 72,160 ரூபாய், புனே - 72,160 ரூபாய், பரோடா - 72,210 ரூபாய், அகமதாபாத் - 72,210 ரூபாய், ஜெய்ப்பூர் - 72,310 ரூபாய், லக்னோ - 72,310 ரூபாய், கோயம்புத்தூர் - 73,100 ரூபாய், மதுரை - 73,100 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53600 ரூபாய், மும்பை - 52920 ரூபாய், டெல்லி - 53040 ரூபாய், கொல்கத்தா - 52920 ரூபாய், பெங்களூர் - 52920 ரூபாய், ஹைதராபாத் - 52920 ரூபாய், கேரளா - 52920 ரூபாய், புனே - 52920 ரூபாய், பரோடா - 52960 ரூபாய், அகமதாபாத் - 52960 ரூபாய், ஜெய்ப்பூர் - 53040 ரூபாய், லக்னோ - 53040 ரூபாய், கோயம்புத்தூர் - 53600 ரூபாய், மதுரை - 53600 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - சென்னை - 24,380 ரூபாய், மும்பை - 24,380 ரூபாய், டெல்லி - 24,380 ரூபாய், கொல்கத்தா - 24,380 ரூபாய், பெங்களூர் - 24,380 ரூபாய், ஹைதராபாத் - 24,380 ரூபாய், கேரளா - 24,380 ரூபாய், அகமதாபாத் - 24,380 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,380 ரூபாய், லக்னோ - 24,380 ரூபாய், கோயம்புத்தூர் - 24,380 ரூபாய், மதுரை - 24,380 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 86500 ரூபாய், மும்பை - 83000 ரூபாய், டெல்லி - 83000 ரூபாய், கொல்கத்தா - 83000 ரூபாய், பெங்களூர் - 85900 ரூபாய், ஹைதராபாத் - 86500 ரூபாய், கேரளா - 86500 ரூபாய், புனே - 83000 ரூபாய், பரோடா - 83000 ரூபாய், அகமதாபாத் - 83000 ரூபாய், ஜெய்ப்பூர் - 83000 ரூபாய், லக்னோ - 83000 ரூபாய், கோயம்புத்தூர் - 86500 ரூபாய், மதுரை - 86500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 272 - 60,111.18 ரூபாய்,
குவைத் - KWD 223.50 - 60,421.88 ரூபாய்,
மலேசியா - MYR 3,620 - 63,129.90 ரூபாய்,
ஓமன் - OMR 283.50 - 61,356.20 ரூபாய்,
கத்தார் - QAR 2,695 - 61,572.93 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,534.06 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 999 - 61,154.98 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,568.29 ரூபாய்,
அபுதாபி - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
அஜ்மான் - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
துபாய் - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
புஜைரா - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,622.50 - 59,500.85 ரூபாய்,
தோஹா - QAR 2,695 - 61,572.93 ரூபாய்,
மஸ்கட் - OMR 283.50 - 61,356.20 ரூபாய்,
தம்மம் - SAR 2,680 - 59,534.06 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 289 - 63,868.13 ரூபாய்,
குவைத் - KWD 237.50 - 64,206.70 ரூபாய்,
மலேசியா - MYR 3,760 - 65,571.39 ரூபாய்,
ஓமன் - OMR 298.50 - 64,602.56 ரூபாய்,
கத்தார் - QAR 2,850 - 65,114.24 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,890 - 64,199.04 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,106 - 67,705.12 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
அமெரிக்கா - USD 755 - 62,900.79 ரூபாய்,
அபுதாபி - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
அஜ்மான் - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
துபாய் - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
புஜைரா - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,832.50 - 64,265.46 ரூபாய்,
தோஹா - QAR 2,850 - 65,114.24 ரூபாய்,
மஸ்கட் - OMR 298.50 - 64,602.56 ரூபாய்,
தம்மம் - SAR 2,890 - 64,199.04 ரூபாய்.
Profit Booking: கிட்கோ நிறுவனத்தைச் சேர்ந்த ஜிம் விக்ஆஃப் கூறுகையில், தங்கத்தில் கடந்த வாரம் பதிவான உச்சத்தை லாபமாக மாற்ற முதலீட்டாளர்கள் முடிவு செய்து தங்கத்தைத் திருப்பி விற்பதே தங்க விலை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலர் பலம்: அமெரிக்க டாலர் மதிப்பு சற்று அதிகரித்ததும் தங்க விலை சரிவுக்கு பங்களித்திருக்கலாம். பொதுவாக, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிக்கும் போது, தங்கத்தின் மீதான தேவை குறைந்து விலை சரிவு காணப்படும்.
பங்குச் சந்தை ஈர்ப்பு: அமெரிக்க மத்திய வங்கி பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை எதிர்பார்த்ததை விட தாமதமாகக் குறைக்கும் என்ற கணிப்பு எழுந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தை நோக்கித் திரும்பியிருக்கலாம். இதுவும் தங்க விலை சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் பதற்றம் குறைவு: கடந்த வாரம் இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவிய பதற்றங்கள் அதிகரித்திருந்த நிலையில், தங்க விலை உயர்ந்திருந்தது. ஆனால், ஏப்ரல் 19 ஆம் தேதி இஸ்ரேல் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கவில்லை. இதனை அடுத்து, மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றங்கள் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இதுவே தங்க விலை சரிவுக்கு முதன்மை காரணமாக தற்போது உள்ளது.
எதிர்கால கணிப்பு: தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள தற்போதைய சரிவு தற்காலிகமானது என சில நிபுணர்கள் கருதுகின்றனர். சர்வதேச அரசியல் நெருக்கடிகள் உருவாகும் பட்சத்தில் மீண்டும் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனால் 2024 ஆம் நிதியாண்டில் தங்கம் விலை பெரும்பாலான காலகட்டத்தில் உயர்வுடனே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதனால் தங்கம் வாங்குவோர் Buy on Dips பார்மூலா-வை பயன்படுத்தித் தங்கத்தைத் தொடர்ந்து வாங்குவது உத்தமம்.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications