தங்கம் விலை வியாழக்கிழமை ஆசியச் சந்தை வர்த்தகத்தில் சற்று மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிரடியாக 0.50 சதவீதம் குறைத்தது மூலம் தங்கம் விலை நேற்று அமெரிக்க வர்த்தக நேரத்தில் அதிரடியாக 2600 டாலர் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டது.
ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் டாலர் மதிப்பு சரிந்த காரணத்தால், தங்கம் மீதான முதலீடுகளும் குறைந்தது, இதனால் இன்று ஆசியச் சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை தனது வரலாற்று உச்ச அளவான 2,600 டாலரில் இருந்து 2567 டாலராக குறைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

இது கிட்டத்தட்ட நேற்றைய அளவீட்டை இன்று எட்டியுள்ளது என்பதாலும், டாலர் மதிப்பு குறைந்த காரணத்தாலும் தங்கம் விலை இந்திய ரீடைல் சந்தையில் குறைந்து காணப்படுகிறது. இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய்க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது, ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
பொதுவாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தனசு பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது பத்திர சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி தங்கம் மற்றும் பங்குச்சந்தையில் அதிகரிக்கும். இன்று பங்குச்சந்தையில் சிறப்பான முதலீடுகள் குவிந்திருந்தாலும் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் அக்டோபர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 0.18 சதவீதம் குறைந்து 72,920 ரூபாயாக உள்ளது, இது டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவால் உருவான பாதிப்பு. இதேபோல் 1 கிலோ வெள்ளியின் டிசம்பர் மாத ஆர்டருக்கான மதிப்பு 0.09 சதவீதம் அதிகரித்து 88,380 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் குறைந்து 68,250 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 280 ரூபாய் குறைந்து 74,450 ரூபாயாக குறைந்துள்ளது. அமெரிக்காவின் வட்டி குறைப்பிற்குப் பின்பு தங்கம் விலை உயராமல் இருப்பதற்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுவது அமெரிக்கப் பொருளாதாரம் இந்த வருட இறுதியில் ரெசிஷனுக்குள் நுழையும் என்பது தான்.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் அதாவது 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 54,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ 96,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் குறைந்து 26,170 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,825 ரூபாய், மும்பை - 6,825 ரூபாய், டெல்லி - 6,840 ரூபாய், கொல்கத்தா - 6,825 ரூபாய், பெங்களூர் - 6,825 ரூபாய், ஹைதராபாத் - 6,825 ரூபாய், கேரளா - 6,825 ரூபாய், புனே - 6,825 ரூபாய், பரோடா - 6,830 ரூபாய், அகமதாபாத் - 6,830 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,840 ரூபாய், லக்னோ - 6,840 ரூபாய், கோயம்புத்தூர் - 6,825 ரூபாய், மதுரை - 6,825 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,445 ரூபாய், மும்பை - 7,445 ரூபாய், டெல்லி - 7,460 ரூபாய், கொல்கத்தா - 7,445 ரூபாய், பெங்களூர் - 7,445 ரூபாய், ஹைதராபாத் - 7,445 ரூபாய், கேரளா - 7,445 ரூபாய், புனே - 7,445 ரூபாய், பரோடா - 7,450 ரூபாய், அகமதாபாத் - 7,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,460 ரூபாய், லக்னோ - 7,460 ரூபாய், கோயம்புத்தூர் - 7,445 ரூபாய், மதுரை - 7,445 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,590 ரூபாய், மும்பை - 5,584 ரூபாய், டெல்லி - 5,597 ரூபாய், கொல்கத்தா - 5,584 ரூபாய், பெங்களூர் - 5,584 ரூபாய், ஹைதராபாத் - 5,584 ரூபாய், கேரளா - 5,584 ரூபாய், புனே - 5,584 ரூபாய், பரோடா - 5,588 ரூபாய், அகமதாபாத் - 5,588 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,597 ரூபாய், லக்னோ - 5,597 ரூபாய், கோயம்புத்தூர் - 5,590 ரூபாய், மதுரை - 5,590 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54600 ரூபாய், மும்பை - 54600 ரூபாய், டெல்லி - 54720 ரூபாய், கொல்கத்தா - 54600 ரூபாய், பெங்களூர் - 54600 ரூபாய், ஹைதராபாத் - 54600 ரூபாய், கேரளா - 54600 ரூபாய், புனே - 54600 ரூபாய், பரோடா - 54640 ரூபாய், அகமதாபாத் - 54640 ரூபாய், ஜெய்ப்பூர் - 54720 ரூபாய், லக்னோ - 54720 ரூபாய், கோயம்புத்தூர் - 54600 ரூபாய், மதுரை - 54600 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,170 ரூபாய், மும்பை - 26,170 ரூபாய், டெல்லி - 26,170 ரூபாய், கொல்கத்தா - 26,170 ரூபாய், பெங்களூர் - 26,170 ரூபாய், ஹைதராபாத் - 26,170 ரூபாய், கேரளா - 26,170 ரூபாய், புனே - 26,170 ரூபாய், வதோதரா - 26,170 ரூபாய், அகமதாபாத் - 26,170 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 96,000 ரூபாய், மும்பை - 91,000 ரூபாய், டெல்லி - 91,000 ரூபாய், கொல்கத்தா - 91,000 ரூபாய், பெங்களூர் - 90,000 ரூபாய், ஹைதராபாத் - 96,000 ரூபாய், கேரளா - 96,000 ரூபாய், புனே - 91,000 ரூபாய், பரோடா - 91,000 ரூபாய், அகமதாபாத் - 91,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 91,000 ரூபாய், லக்னோ - 91,000 ரூபாய், கோயம்புத்தூர் - 96,000 ரூபாய், மதுரை - 96,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.80 - 6,616 ரூபாய்
குவைத் - KWD 23.36 - 6,407 ரூபாய்
மலேசியா - MYR 346 - 6,802 ரூபாய்
ஓமன் - OMR 30.60 - 6,650 ரூபாய்
கத்தார் - QAR 292 - 6,701 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,554 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 103.90 - 6,714 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 287.50 - 6,549 ரூபாய்
அமெரிக்கா - USD 78.50 - 6,568 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 287.50 - 6,549 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 287.50 - 6,549 ரூபாய்
துபாய் (UAE) - AED 287.50 - 6,549 ரூபாய்
புஜைரா (UAE) - AED 287.50 - 6,549 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 287.50 - 6,549 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 287.50 - 6,549 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 292 - 6,701 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.60 - 6,650 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,554 ரூபாய்
இங்கிலாந்து - GBP 57.33 - 6,338 ரூபாய்
கனடா - CAD 108.75 - 6,692 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 117.90 - 6,700 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.70 - 7,037 ரூபாய்
குவைத் - KWD 25.40 - 6,967 ரூபாய்
மலேசியா - MYR 361 - 7,097 ரூபாய்
ஓமன் - OMR 32.55 - 7,074 ரூபாய்
கத்தார் - QAR 312 - 7,160 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 317 - 7,067 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 114.50 - 7,399 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 310.50 - 7,073 ரூபாய்
அமெரிக்கா - USD 83.50 - 6,986 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 310.50 - 7,073 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 310.50 - 7,073 ரூபாய்
துபாய் (UAE) - AED 310.50 - 7,073 ரூபாய்
புஜைரா (UAE) - AED 310.50 - 7,073 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 310.50 - 7,073 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 310.50 - 7,073 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 312 - 7,160 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.55 - 7,074 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 317 - 7,067 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.54 - 6,914 ரூபாய்
கனடா - CAD 115 - 7,076 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 128.70 - 7,314 ரூபாய்
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications