சரசரவென சரியும் தங்கம் விலை.. தங்கம் வாங்க செம சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க..!!

தங்கம் யாருக்குத் தான் பிடிக்காது, முன்பெல்லாம் பெண்கள் தான் தங்க நகை மீது அதிகம் ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்ற நிலை இருந்தது, ஆனால் இப்போது ஆண்களும் தங்க நகைகளையும், வைர நகைகளையும் ஆர்வத்துடன் அணியும் டிரெண்ட் அதிகரித்துள்ளது. பல பணக்காரர்கள் தினமும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணியும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர். இதனால் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் பல பிரிவில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டு உள்ளது. இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து தான் அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

சரசரவென சரியும் தங்கம் விலை.. தங்கம் வாங்க செம சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க..!!

எனவே இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் வெளிநாட்டுச் சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படும். இதனால் இந்தியாவின் தங்க வர்த்தகத்திற்கான டிமாண்டின் தாக்கம் மிகவும் சிறிய அளவிலேயே உள்ளது.

கடந்த வாரம் தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்ட பின்பு, பல முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு மாறாகப் பங்குச்சந்தையிலும், நாணய சந்தையிலும் முதலீடு செய்து வருகின்றனர். இதன் வாயிலாகத் தங்கம் விலை நான்கு நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று சர்வதேசச் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2400 டாலரில் இருந்து 2410 டாலர் வரையில் கணிசமாக உயர்ந்திருந்தாலும், அதன் வரலாற்று உச்ச அளவான 2480 டாலரில் இருந்து பெரிய அளவில் சரிந்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

இந்த கணிசமான உயர்வை தொடர்ந்து எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 0.11 சதவீதம் மட்டும் உயர்ந்து 73,073 ரூபாயாக உள்ளது, இதுவே வெள்ளி விலை 0.27 சதவீதம் குறைந்து 89,400 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை வெறும் 100 ரூபாய் குறைந்து 68,250 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 120 ரூபாய் உயர்ந்து 74,450 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ரீடைல் சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த 4 நாட்களில் 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 95 ரூபாய் குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 104 ரூபாய் குறைந்துள்ளது. இந்த மாபெரும் சரிவு பல வாரங்களுக்கு பின்பு பதிவாகியுள்ளதால், தங்கம் வாங்குவோர் இந்த சரிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 54,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ரீடைல் சந்தையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பதிவான 96000 ரூபாய் அளவிலேயே உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 110 ரூபாய் குறைந்து 25,840 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,825 ரூபாய், மும்பை - 6,770 ரூபாய், டெல்லி - 6,785 ரூபாய், கொல்கத்தா - 6,770 ரூபாய், பெங்களூர் - 6,770 ரூபாய், ஹைதராபாத் - 6,770 ரூபாய், கேரளா - 6,770 ரூபாய், புனே - 6,770 ரூபாய், பரோடா - 6,775 ரூபாய், அகமதாபாத் - 6,775 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,785 ரூபாய், லக்னோ - 6,785 ரூபாய், கோயம்புத்தூர் - 6,825 ரூபாய், மதுரை - 6,825 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,445 ரூபாய், மும்பை - 7,385 ரூபாய், டெல்லி - 7,400 ரூபாய், கொல்கத்தா - 7,385 ரூபாய், பெங்களூர் - 7,385 ரூபாய், ஹைதராபாத் - 7,385 ரூபாய், கேரளா - 7,385 ரூபாய், புனே - 7,385 ரூபாய், பரோடா - 7,390 ரூபாய், அகமதாபாத் - 7,390 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,400 ரூபாய், லக்னோ - 7,400 ரூபாய், கோயம்புத்தூர் - 7,445 ரூபாய், மதுரை - 7,445 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54600 ரூபாய், மும்பை - 54160 ரூபாய், டெல்லி - 54280 ரூபாய், கொல்கத்தா - 54160 ரூபாய், பெங்களூர் - 54160 ரூபாய், ஹைதராபாத் - 54160 ரூபாய், கேரளா - 54160 ரூபாய், புனே - 54160 ரூபாய், பரோடா - 54200 ரூபாய், அகமதாபாத் - 54200 ரூபாய், ஜெய்ப்பூர் - 54280 ரூபாய், லக்னோ - 54280 ரூபாய், கோயம்புத்தூர் - 54600 ரூபாய், மதுரை - 54600 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,840 ரூபாய், மும்பை - 25,840 ரூபாய், டெல்லி - 25,840 ரூபாய், கொல்கத்தா - 25,840 ரூபாய், பெங்களூர் - 25,840 ரூபாய், ஹைதராபாத் - 25,840 ரூபாய், கேரளா - 25,840 ரூபாய், அகமதாபாத் - 25,840 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,840 ரூபாய், லக்னோ - 25,840 ரூபாய், கோயம்புத்தூர் - 25,840 ரூபாய், மதுரை - 25,840 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 96,000 ரூபாய், மும்பை - 91,500 ரூபாய், டெல்லி - 91,500 ரூபாய், கொல்கத்தா - 91,500 ரூபாய், பெங்களூர் - 91,550 ரூபாய், ஹைதராபாத் - 96,000 ரூபாய், கேரளா - 96,000 ரூபாய், புனே - 91,500 ரூபாய், பரோடா - 91,500 ரூபாய், அகமதாபாத் - 91,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 91,500 ரூபாய், லக்னோ - 91,500 ரூபாய், கோயம்புத்தூர் - 96,000 ரூபாய், மதுரை - 96,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,191 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,974 ரூபாய்
மலேசியா - MYR 358 - 6,394 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,302 ரூபாய்
கத்தார் - QAR 274 - 6,286 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 276 - 6,156 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 101 - 6,280 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 269 - 6,133 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,149 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 269 - 6,133 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 269 - 6,133 ரூபாய்
துபாய் (UAE) - AED 269 - 6,133 ரூபாய்
புஜைரா (UAE) - AED 269 - 6,133 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 269 - 6,133 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 269 - 6,133 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 274 - 6,286 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,302 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 276 - 6,156 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,590 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,521 ரூபாய்
மலேசியா - MYR 372 - 6,644 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,639 ரூபாய்
கத்தார் - QAR 292 - 6,699 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 297 - 6,624 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 111 - 6,908 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 291 - 6,623 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,484 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 291 - 6,623 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 291 - 6,623 ரூபாய்
துபாய் (UAE) - AED 291 - 6,623 ரூபாய்
புஜைரா (UAE) - AED 291 - 6,623 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 291 - 6,623 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 291 - 6,623 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 292 - 6,699 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,639 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 297 - 6,624 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+