தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. லட்டு மாதிரி வந்த வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்..!

தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி இதை வாங்குவதற்கு ஒரு பெரும் கூட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. தங்கம் விலை கிராமுக்கு 1 ரூபாய், 5 ரூபாய் உயர்ந்தால் கூட கதறும் மக்கள், தங்கம் விலை குறைந்தால் கண்டுகொள்வதில்லை.

தங்கம் விலை வாங்குவோர் அதன் விலையை உயர்வைக் காட்டிலும் அதிகமாகக் குறையும் போது தான் அதிகம் கவனிக்க வேண்டும். இதுவே நீங்கள் தங்கத்தை விற்பவராக இருந்தால் தங்கம் விலை எப்போதெல்லாம் உயர்கிறதோ, அப்போதெல்லாம் ஏன் உயர்கிறது? எதற்காக உயர்கிறது..? இந்த உயர்வு நீடிக்குமா..? என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. லட்டு மாதிரி வந்த வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்..!

இந்த நிலையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது, இதனால் பலர் தங்கம் வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது, அதேபோல் தடாலடியாகச் சரிந்தது.

இந்த பெரும் மாற்றத்திற்கு முக்கியமான காரணம் சர்வதேச சந்தையில் நடக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தான். இந்தியாவில் தங்கம் அதிகளவில் வாங்கப்பட்டாலும் சர்வதேச சந்தையில் பல மடங்கு அதிகம் தங்கம் கைமாறுகிறது. இப்படியிருக்கும் போது அமெரிக்கப் பொருளாதாரமும், அமெரிக்க டாலரின் மதிப்பும் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.

அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கியின் நாணய கொள்கையின் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இது பொருளாதார வல்லுனர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும், அந்நாட்டில் வட்டி விகிதம் இந்த வருடம் ஒரு முறை மட்டுமே இருக்கும் எனக் கணிப்புகள் வெளியான காரணத்தால் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் பத்திர சந்தைக்கும், பங்குச்சந்தைக்கும் சென்றது. இதன் வாயிலாகவே தங்கம் கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.

இந்த 2 நாள் சரிவைப் பயன்படுத்தி தங்கம் வாங்குவோருக்காக இன்று ரீடைல் சந்தையில் இருக்கும் விலை நிலவரத்தையும், இந்தியா மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தங்கம் விலையைத் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளோம்.

இதன் அடிப்படையில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 66500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 72,550 ரூபாயாக குறைந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 53,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 200 ரூபாய் குறைந்து 95000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் அதிகரித்து 25,570 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,650 ரூபாய், மும்பை - 6,590 ரூபாய், டெல்லி - 6,605 ரூபாய், கொல்கத்தா - 6,590 ரூபாய், பெங்களூர் - 6,590 ரூபாய், ஹைதராபாத் - 6,590 ரூபாய், கேரளா - 6,590 ரூபாய், புனே - 6,590 ரூபாய், பரோடா - 6,595 ரூபாய், அகமதாபாத் - 6,595 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,605 ரூபாய், லக்னோ - 6,605 ரூபாய், கோயம்புத்தூர் - 6,650 ரூபாய், மதுரை - 6,650 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,255 ரூபாய், மும்பை - 7,189 ரூபாய், டெல்லி - 7,204 ரூபாய், கொல்கத்தா - 7,189 ரூபாய், பெங்களூர் - 7,189 ரூபாய், ஹைதராபாத் - 7,189 ரூபாய், கேரளா - 7,189 ரூபாய், புனே - 7,189 ரூபாய், பரோடா - 7,194 ரூபாய், அகமதாபாத் - 7,194 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,204 ரூபாய், லக்னோ - 7,204 ரூபாய், கோயம்புத்தூர் - 7,255 ரூபாய், மதுரை - 7,255 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53200 ரூபாய், மும்பை - 52720 ரூபாய், டெல்லி - 52840 ரூபாய், கொல்கத்தா - 52720 ரூபாய், பெங்களூர் - 52720 ரூபாய், ஹைதராபாத் - 52720 ரூபாய், கேரளா - 52720 ரூபாய், புனே - 52720 ரூபாய், பரோடா - 52760 ரூபாய், அகமதாபாத் - 52760 ரூபாய், ஜெய்ப்பூர் - 52840 ரூபாய், லக்னோ - 52840 ரூபாய், கோயம்புத்தூர் - 53200 ரூபாய், மதுரை - 53200 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,570 ரூபாய், மும்பை - 25,570 ரூபாய், டெல்லி - 25,570 ரூபாய், கொல்கத்தா - 25,570 ரூபாய், பெங்களூர் - 25,570 ரூபாய், ஹைதராபாத் - 25,570 ரூபாய், கேரளா - 25,570 ரூபாய், அகமதாபாத் - 25,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,570 ரூபாய், லக்னோ - 25,570 ரூபாய், கோயம்புத்தூர் - 25,570 ரூபாய், மதுரை - 25,570 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 95000 ரூபாய், மும்பை - 90500 ரூபாய், டெல்லி - 90500 ரூபாய், கொல்கத்தா - 90500 ரூபாய், பெங்களூர் - 90400 ரூபாய், ஹைதராபாத் - 95000 ரூபாய், கேரளா - 95000 ரூபாய், புனே - 90500 ரூபாய், பரோடா - 90500 ரூபாய், அகமதாபாத் - 90500 ரூபாய், ஜெய்ப்பூர் - 90500 ரூபாய், லக்னோ - 90500 ரூபாய், கோயம்புத்தூர் - 95000 ரூபாய், மதுரை - 95000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 26.90 - 5,963 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,995 ரூபாய்,
மலேசியா - MYR 344 - 6,095 ரூபாய்,
ஓமன் - OMR 27.65 - 6,000 ரூபாய்,
கத்தார் - QAR 264 - 6,051 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 266 - 5,923 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 97.30 - 6,008 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 258.50 - 5,880 ரூபாய்,
அமெரிக்கா - USD 70.50 - 5,890 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 258.50 - 5,880 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 258.50 - 5,880 ரூபாய்,
துபாய் (UAE) - AED 258.50 - 5,880 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 258.50 - 5,880 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 258.50 - 5,880 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 258.50 - 5,880 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 264 - 6,051 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.65 - 6,000 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 266 - 5,923 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 28.60 - 6,339 ரூபாய்,
குவைத் - KWD 23.30 - 6,350 ரூபாய்,
மலேசியா - MYR 360 - 6,378 ரூபாய்,
ஓமன் - OMR 29.35 - 6,369 ரூபாய்,
கத்தார் - QAR 281.50 - 6,452 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 286 - 6,369 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 107.60 - 6,644 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 279.25 - 6,351 ரூபாய்,
அமெரிக்கா - USD 74.50 - 6,224 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 279.25 - 6,351 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 279.25 - 6,351 ரூபாய்,
துபாய் (UAE) - AED 279.25 - 6,351 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 279.25 - 6,351 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 279.25 - 6,351 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 279.25 - 6,351 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 281.50 - 6,452 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.35 - 6,369 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 286 - 6,369 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+