சென்னை: தங்கம் அதிகம் வாங்குவதும் இந்தியாவாக இருந்தாலும், அதன் விலை நிர்ணயம் செய்தும் குடுமி அமெரிக்காவிடம் உள்ளது. பொதுவாக ஒரு பொருள் அதிகம் வாங்கும் நாடு அல்லது அதிகம் உற்பத்தி செய்யும் நாட்டிடம் தான் இதன் விலையை நிர்ணயம் செய்யும் கட்டுப்பாடு இருக்கும்.
ஆனால் தங்கத்திற்கு அப்படியில்லை, காரணம் தங்கம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு முதலீட்டுக் கருவி. அரசு, மத்திய வங்கிகள் முதல் சாமானிய மக்கள் வரையில் அனைவரும் வாங்கும், முதலீடு செய்யும் கருவியாகத் தங்கம் உள்ளது. இதனால் பணப்புழக்கம், அதிக லாபம் ஆகிய இரண்டும் தான் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் பணவீக்கம் குறைந்து வரும் இதேவேளையில், அந்நாட்டின் அரசு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிகப்படியான முதலீடுகள் ஒதுக்கியதைப் பார்க்கும்போது, அதன் பொருளாதார வளர்ச்சிப் பாதையை உறுதி செய்கிறது.
இதேபோல் வெனிசுலா கச்சா எண்ணெய் சர்வதேச வர்த்தக சந்தைக்கு வந்த பின்பு பல பணவீக்கத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அமெரிக்கா பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை விரைவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பத்திர சந்தை முதலீட்டில் லாபம் குறையும் என்பதை உணர்ந்த முதலீட்டாளர்கள், அடுத்த முக்கிய மற்றும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது முதலீட்டைத் திருப்பியுள்ளனர். இதன் வாயிலாகவே தங்கம் ஒரு கிராமுக்கு மார்ச் 2 ஆம் தேதி 100 ரூபாயும், 5ஆம் தேதி 85 ரூபாயும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய அதிகப்படியான 2,138 டாலர் அளவீட்டில் இருந்து 2127 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் 2124 டாலரில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் சந்தையில் நேற்றைய விலை ஒப்பிடுகையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.17 சதவீதம் சரிந்து 64,733 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ 0.08 சதவீதம் சரிந்து 73,315 ரூபாயாக உள்ளது.
ஆனால் ரீடைல் சந்தையில் நேற்றைய வர்த்தக தாக்கம், டாலர் மதிப்பு ஆகியவற்றின் மூலம் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் உயர்ந்து 60,400 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் உயர்ந்து 65,890 ரூபாயாக உள்ளது.
நல்ல விஷயமாக வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 78000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 250 ரூபாய் குறைந்து 23,450 ரூபாயாக உள்ளது. தங்கத்தை விட பிளாட்டினம் மவுசு கூட இந்த விலை நிலையும் முக்கியமான காரணம்.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?



Click it and Unblock the Notifications