இந்தியாவையும், இந்தியர்களையும் 9 மாதமாக ஆட்டிப்படைத்து வந்த தங்கம் இன்று தனது உச்ச விலையான 56,000 ரூபாயில் இருந்து 43,000 ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த சில நாட்களுக்குப் பங்குச்சந்தையும், பத்திர சந்தை, கிரிப்டோ சந்தையின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தால் தங்கம் விலை 42,000 ரூபாய் அளவிற்குக் குறையும் எனவும் கணிக்கப்படுகிறது.
2020 ஆகஸ்ட் மாதம் 10 கிராம் தங்கம் விலை வரலாற்று உச்ச அளவான 56,310 ரூபாய் அளவீட்டில் இருந்து தற்போது 43,000 ரூபாய் அளவிற்குக் குறைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 21 சதவீதம் சரிந்துள்ளது.
தங்கம் விலை சரிவுக்கு முக்கியக் காரணம்
தங்கம் விலை சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணம் இந்திய சந்தையோ, இந்திய முதலீட்டாளர்களோ இல்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பெரும் வல்லரசு நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மிகப்பெரிய தொகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இத்திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தை முதலீடுகள்
இதன் எதிரொலியாக உற்பத்தி, ரீடைல், சேவைத் துறை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது. இதேவேளையில் அரசுகள் வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த அதிகளவிலான நிதி தேவைப்படும் காரணத்தால் பத்திர விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.
தங்க முதலீட்டுச் சந்தையில் மாற்றம்
எனவே தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தும், ஏற்கனவே செய்யப்பட்ட தங்கம் முதலீடுகளும் வெளியேறிய நிலையில் தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தைச் சேமிப்பிற்காக வாங்க விரும்புவோருக்கும் இது மிகவும் சிறப்பான காலமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம்
இந்நிலையில் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1700 டாலர் அளவீட்டைத் தாண்டி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வர்த்தக முடிவில் 1698 டாலருக்கு முடிவடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1691 டாலர் வரையில் சரிந்தது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஆபரணத் தங்கம் விலை
இதன் எதிரொலியாக இன்று இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை கணிசமான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதன் படி 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் சரிந்து 4,342 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை இன்று 34,736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் விலை
இதேபோல் 24 கேரட் தங்கம் விலை இன்றைய வர்த்தகச் சந்தையில் சரிந்துள்ள காரணத்தால் நீண்ட காலச் சேமிப்புக்காகத் தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் சொக்கத் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 44,420 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும், வெள்ளியின் விலை பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் வெள்ளி விலை 70000 ரூபாய் நிலையில் இருந்து சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை 65,700 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை குறைஞ்சிருக்கும் நேரத்துல தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி ஒரு சிக்கலா!!



Click it and Unblock the Notifications