கடந்த இரண்டு நாட்களில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மிதமான உயர்வைத் தக்கவைத்துக்கொள்ளத் தங்கம் தடுமாறி வருகிறது. ஐரோப்பிய வர்த்தகத்தில் (European Session) ஆரம்பத்திலேயே தங்கம் விலை சரிய துவங்கியது மட்டும் அல்லாமல் இது உடனடியாக இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
பொதுவாக இந்திய ரீடைல் சந்தையில் சர்வதேச தாக்கம் அடுத்த நாளில் தான் எதிரொலிக்கும், காலையில் 10 மணிக்கு வெளியாகும் ரீடைல் தங்கம் விலை முந்தைய நாளின் அமெரிக்கச் சந்தை முடிவில் எதிரொலிக்கும் விலை, அதன் பின்பு 12 முதல் 2 மணி வரையில் அப்டேட் செய்யப்படும் விலை ஆசிய சந்தை விலை நிலைகள் தான்.

ஆனால் ஐரோப்பிய சந்தை விலை ரீடைல் சந்தையில் எதிரொலிக்காது, இது அடுத்த நாளில் தான் பதிவாகும். ஆனால் எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சர்வதேச தங்கம் விலை உடனுக்குடன் அப்படேட் ஆகும் காரணத்தால் ஐரோப்பியச் சந்தையில் பதிவான சரிவு தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் எதிரொலித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 2317 டாலராக இருக்கும் வேளையில், தற்போது 2311 டாலருக்கு குறைந்துள்ளது. இதன் மூலம் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஆகஸ்ட் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை 0.04 சதவீதம் சரிந்துள்ளது.
ஆனால் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூலை மாதம் முடியும் ஒரு கிலோ வெள்ளியின் பியூச்சர்ஸ் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 88,932.00 ரூபாயாக உள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரியாமல் தடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான காரணம், அமெரிக்காவில் இருந்து வெளியாகவிருக்கும் பணவீக்க தரவு மற்றும் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டத்தின் முடிவுகள் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த FOMC கூட்டத்தில் ஐரோப்பா, கனடா, ஸ்வீடன், சுவிஸ் நாடுகளைப் போல் வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இல்லையெனில் அமெரிக்க மத்திய வங்கியின் இக்கூட்டத்தில் எப்போது வட்டி விகிதம் குறையும் என்பது குறித்த முடிவுகளை வெளியிடும், இதனால் தங்கம் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில் முக்கிய தரவுகள் மற்றும் நிகழ்வுகள் வெளியாக இருப்பதால், வலுவான அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மற்றும் தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கம் காரணமாக, செப்டம்பர் மாதத்தில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் குறைத்து வருகின்றனர் முதலீட்டாளர்கள்.
இதன் வாயிலாக அமெரிக்க டாலர் (USD) மதிப்பு உயர வழிவகை செய்துள்ளது, இதன் மூலம் ஒரு மாத உச்சத்தை நெருங்கியுள்ளது. இதுவே தங்கம் விலைக்கு எதிரான முக்கிய தடைக்கல்லாக செயல்படுகிறது.
எவ்வாறெனினும், ஐரோப்பாவில் உருவாகியுள்ள புதிய அரசியல் அச்சம், வளைகுடா நாடுகளில் நீடிக்கும் புவிசார் அரசியல் போக்குகளும் தங்கம் விலை வீழ்ச்சியை தடுத்து நிறுத்துகின்றன. இதனால், தங்கம் விலை சரியும் என நம்பும் மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications