அட அட கேட்கவே சந்தோசமா இருக்கே.. தங்கம் விலை குறைந்திருக்கு பாஸ்..! இப்போ தங்க நகை வாங்கலாமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், தங்கம் வாங்குவதற்கு நல்ல சான்ஸ் கிடைக்காதா என எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 50 ரூபாய் வரையில் அதிகரித்த தங்கம் விலை இன்று 30 ரூபாய் குறைந்துள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிடும் அனைவருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் வரையில் தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இதற்கு முக்கியமான காரணம் இந்த விட்டி விகிதத்தை உறுதி செய்யும் பணவீக்கம், வேலைவாய்ப்பு, மக்களின் நுகர்வு, பெட்ரல் ரிசர்வின் ஜாக்சன் ஹோல் கூட்டத்தின் முடிவுகள் முக்கியமானதாக உள்ளது. இந்த தரவுகள் தான் வட்டி விகிதத்தை உறுதி செய்யும் முக்கிய கருவியாக உள்ளது.

அட அட கேட்கவே சந்தோசமா இருக்கே.. தங்கம் விலை குறைந்திருக்கு பாஸ்..! இப்போ தங்க நகை வாங்கலாமா?

இந்த வாரம் துவங்கியது முதல் உயர்ந்த வண்ணமாக இருந்த தங்கம் விலை நாளை வெளியாக உள்ள அமெரிக்க வேலைவாய்ப்பின்மை தரவுகளும், பெடரல் ரிசர்வ்-ன் ஜாக்சன் ஹோல் கூட்டத்தின் முடிவுகளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக மீண்டும் சந்தையில் இருக்கும் முதலீடுகள் பத்திர சந்தைக்குள் நுழைந்து தங்கம் விலை தனது வரலாற்று உச்ச அளவில் இருந்து கீழே இறக்கிவிட்டு உள்ளது.

இதன் வாயிலாகச் சர்வதேசச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2518 டாலராக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகத்தில் 2501 டாலராக குறைந்து ஐரோப்பிய சந்தை வர்த்தகத்தில் 2510 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் காமெக்ஸ் சந்தையில் 3 டாலர் குறைந்து 2544.5 டாலர் வரையில் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கம் கட்டாயம் இந்திய சந்தையில் எதிரொலிக்கும் என்பதால் நேற்று அமெரிக்க சந்தை மற்றும் இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகத்தின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.10 சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் ஐரோப்பிய சந்தை கொடுத்த நம்பிக்கை இந்த சரிவை 0.04 சதவீதமாகக் குறைக்கத் துவங்கி தற்போது 71800 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ எம்சிஎக்ஸ் சந்தையில் 0.21 சதவீதம் குறைந்து 84,689 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 66,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் குறைந்து 72,870 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் அதிகப்படியாக ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ஆகஸ்ட் 21 ஆம் தேதி 6710 ரூபாயாக உள்ளது, இதேபோல் குறைவான விலையை ஆகஸ்ட் 7ஆம் தேதி 6330 ரூபாய் அளவில் பதிவு செய்துள்ளது. இந்த மாதம் தங்கம் மீது முதலீடு செய்துள்ளவர்களுக்கு 3.89 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை அதாவது ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 53,440 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் 92 ரூபாயாகவும், ஒரு கிலோ 92,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 310 ரூபாய் உயர்ந்து 25,930 ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+