தங்கம் விலை ஜூலை மாதத்தில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து லாபகரமாகவே உள்ளது. ஜூலை மாதம் 1 ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 6685 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் ஜூலை 6ஆம் தேதி அதிகப்படியாக 6820 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் இன்று ஒரு கிராம் 6760 ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் ஜூலை மாதம் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த 10 நாட்களில் 1.12 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. இந்தியாவில் தங்கம் சர்வதேசச் சந்தையின் வர்த்தக விலையைச் சார்ந்தே இருக்கிறது, இந்தியாவில் அட்சய திருதி, தீபாவளி போன்ற பண்டிகைகளைத் தாண்டி தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை இந்தியச் சந்தையால் ஏற்படுத்த முடியாது.

இந்த மாத துவக்கத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது. ஆனால் இந்த வாரத் துவக்கத்தில் சீனாவின் மத்திய வங்கி தங்கம் வாங்குவதை 2வது மாதமாக குறைத்துள்ளது என்ற அறிவிப்பு தங்கம் விலையை சரிவுக்கு கொண்டு சென்றது.
செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தக நேரத்தில் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பை பணவீக்கம் - வேலைவாய்ப்பு தரவுகள் அடிப்படையில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று எவ்விதமான தேதியை அறிவிக்காமல் பேசினார். இது முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதன் வாயிலாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2364 டாலரில் இருந்து இன்று 2374 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இது தொடர்ந்தால் இந்த வார இறுதிக்குள் 2400 டாலர் அளவீட்டை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை 0.30 முதல் 0.40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 67,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 73,750 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் மட்டும் குறைந்து 54,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை இன்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 99000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 620 ரூபாய் குறைந்து 26,360 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,760 ரூபாய், மும்பை - 6,710 ரூபாய், டெல்லி - 6,725 ரூபாய், கொல்கத்தா - 6,710 ரூபாய், பெங்களூர் - 6,710 ரூபாய், ஹைதராபாத் - 6,710 ரூபாய், கேரளா - 6,710 ரூபாய், புனே - 6,710 ரூபாய், பரோடா - 6,715 ரூபாய், அகமதாபாத் - 6,715 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,725 ரூபாய், லக்னோ - 6,725 ரூபாய், கோயம்புத்தூர் - 6,760 ரூபாய், மதுரை - 6,760 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,375 ரூபாய், மும்பை - 7,320 ரூபாய், டெல்லி - 7,335 ரூபாய், கொல்கத்தா - 7,320 ரூபாய், பெங்களூர் - 7,320 ரூபாய், ஹைதராபாத் - 7,320 ரூபாய், கேரளா - 7,320 ரூபாய், புனே - 7,320 ரூபாய், பரோடா - 7,325 ரூபாய், அகமதாபாத் - 7,325 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,335 ரூபாய், லக்னோ - 7,335 ரூபாய், கோயம்புத்தூர் - 7,375 ரூபாய், மதுரை - 7,375 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54080 ரூபாய், மும்பை - 53680 ரூபாய், டெல்லி - 53800 ரூபாய், கொல்கத்தா - 53680 ரூபாய், பெங்களூர் - 53680 ரூபாய், ஹைதராபாத் - 53680 ரூபாய், கேரளா - 53680 ரூபாய், புனே - 53680 ரூபாய், பரோடா - 53720 ரூபாய், அகமதாபாத் - 53720 ரூபாய், ஜெய்ப்பூர் - 53800 ரூபாய், லக்னோ - 53800 ரூபாய், கோயம்புத்தூர் - 54080 ரூபாய், மதுரை - 54080 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,360 ரூபாய், மும்பை - 26,360 ரூபாய், டெல்லி - 26,360 ரூபாய், கொல்கத்தா - 26,360 ரூபாய், பெங்களூர் - 26,360 ரூபாய், ஹைதராபாத் - 26,360 ரூபாய், கேரளா - 26,360 ரூபாய், அகமதாபாத் - 26,360 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,360 ரூபாய், லக்னோ - 26,360 ரூபாய், கோயம்புத்தூர் - 26,360 ரூபாய், மதுரை - 26,360 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99,000 ரூபாய், மும்பை - 94,500 ரூபாய், டெல்லி - 94,500 ரூபாய், கொல்கத்தா - 94,500 ரூபாய், பெங்களூர் - 94,500 ரூபாய், ஹைதராபாத் - 99,000 ரூபாய், கேரளா - 99,000 ரூபாய், புனே - 94,500 ரூபாய், பரோடா - 94,500 ரூபாய், அகமதாபாத் - 94,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 94,500 ரூபாய், லக்னோ - 94,500 ரூபாய், கோயம்புத்தூர் - 99,000 ரூபாய், மதுரை - 99,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28 - 6,112 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,903 ரூபாய்
மலேசியா - MYR 351 - 6,226 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,201 ரூபாய்
கத்தார் - QAR 270 - 6,193 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 273 - 6,076 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,166 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 266 - 6,034 ரூபாய்
அமெரிக்கா - USD 72 - 6,010 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 266 - 6,034 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 266 - 6,034 ரூபாய்
துபாய் (UAE) - AED 266 - 6,034 ரூபாய்
புஜைரா (UAE) - AED 266 - 6,034 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 266 - 6,034 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 266 - 6,034 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 270 - 6,193 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,201 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 273 - 6,076 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29 - 6,488 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,440 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,528 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,537 ரூபாய்
கத்தார் - QAR 288 - 6,605 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,543 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,815 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 287 - 6,517 ரூபாய்
அமெரிக்கா - USD 76 - 6,344 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 287 - 6,517 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 287 - 6,517 ரூபாய்
துபாய் (UAE) - AED 287 - 6,517 ரூபாய்
புஜைரா (UAE) - AED 287 - 6,517 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 287 - 6,517 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 287 - 6,517 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 288 - 6,605 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,537 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,543 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications