தங்கம் விலை டக்குன்னு சரிந்தது.. 2 நாளுக்கு பின்பு குட்நியூஸ்.. சென்னை, கோவையில் தங்கம் விலை என்ன..?

தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான தடுமாற்றம் நடந்து வரும் காரணத்தால் கடந்த ஒரு வாரமாக இதன் விலையில் சிறிய அளவிலான ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாகத் தங்க நகை வாங்குவோர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் சர்வதேசச் சந்தைக்கு பெரும் பங்கு உள்ளது எல்லோருக்கும் தெரியும், இதன் படி தற்போது ஐரோப்பா, கனடா,ஸ்வீடன், சுவிஸ் ஆகியவை தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது, ஜப்பான் வட்டியை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மொத்த சந்தையும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகித குறைப்பைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

தங்கம் விலை டக்குன்னு சரிந்தது.. 2 நாளுக்கு பின்பு குட்நியூஸ்.. சென்னை, கோவையில் தங்கம் விலை என்ன..?

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த வருடம் ஒரு முறை மட்டும் வட்டி விகிதம் குறைக்கும் என கணிக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான சிக்னல் இல்லாமல் உள்ளது. இதேபோல் வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் நாடுகள் மத்தியில் போர் பதற்றம் தணிந்துள்ளது.

இவ்விரு முக்கிய காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் மந்த நிலைக்கு சென்றுள்ளது. இதன் எதிரொலியாக 22 கேரட் தங்கம் விலை ஜூன் மாதம் 0.15 சதவீதம் சரிந்துள்ளது, 24 கேரட் தங்கம் விலை 0.26 சதவீதம் சரிந்துள்ளது.

இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2328.28 டாலரில் இருந்து 2342 டாலருக்கு உயர்ந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.59 சதவீதம் உயர்ந்து 72.155 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 1.49 சதவீதம் அதிகரித்து 90,810 ரூபாயாக உள்ளது.

ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் குறைந்து 6700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 18 கேரட் தங்கம் விலை 8 ரூபாய் குறைந்து 5488 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1.50 ரூபாய் குறைந்து 97.10 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,700 ரூபாய், மும்பை - 6,640 ரூபாய், டெல்லி - 6,655 ரூபாய், கொல்கத்தா - 6,640 ரூபாய், பெங்களூர் - 6,640 ரூபாய், ஹைதராபாத் - 6,640 ரூபாய், கேரளா - 6,640 ரூபாய், புனே - 6,640 ரூபாய், பரோடா - 6,645 ரூபாய், அகமதாபாத் - 6,645 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,655 ரூபாய், லக்னோ - 6,655 ரூபாய், கோயம்புத்தூர் - 6,700 ரூபாய், மதுரை - 6,700 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,301 ரூபாய், மும்பை - 7,244 ரூபாய், டெல்லி - 7,259 ரூபாய், கொல்கத்தா - 7,244 ரூபாய், பெங்களூர் - 7,244 ரூபாய், ஹைதராபாத் - 7,244 ரூபாய், கேரளா - 7,244 ரூபாய், புனே - 7,244 ரூபாய், பரோடா - 7,249 ரூபாய், அகமதாபாத் - 7,249 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,259 ரூபாய், லக்னோ - 7,259 ரூபாய், கோயம்புத்தூர் - 7,301 ரூபாய், மதுரை - 7,301 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53600 ரூபாய், மும்பை - 53120 ரூபாய், டெல்லி - 53240 ரூபாய், கொல்கத்தா - 53120 ரூபாய், பெங்களூர் - 53120 ரூபாய், ஹைதராபாத் - 53120 ரூபாய், கேரளா - 53120 ரூபாய், புனே - 53120 ரூபாய், பரோடா - 53160 ரூபாய், அகமதாபாத் - 53160 ரூபாய், ஜெய்ப்பூர் - 53240 ரூபாய், லக்னோ - 53240 ரூபாய், கோயம்புத்தூர் - 53600 ரூபாய், மதுரை - 53600 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,260 ரூபாய், மும்பை - 26,260 ரூபாய், டெல்லி - 26,260 ரூபாய், கொல்கத்தா - 26,260 ரூபாய், பெங்களூர் - 26,260 ரூபாய், ஹைதராபாத் - 26,260 ரூபாய், கேரளா - 26,260 ரூபாய், அகமதாபாத் - 26,260 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,260 ரூபாய், லக்னோ - 26,260 ரூபாய், கோயம்புத்தூர் - 26,260 ரூபாய், மதுரை - 26,260 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 97100 ரூபாய், மும்பை - 92500 ரூபாய், டெல்லி - 92500 ரூபாய், கொல்கத்தா - 92500 ரூபாய், ங்களூர் - 90900 ரூபாய், ஹைதராபாத் - 97100 ரூபாய், கேரளா - 97100 ரூபாய், புனே - 92500 ரூபாய், பரோடா - 92500 ரூபாய், அகமதாபாத் - 92500 ரூபாய், ஜெய்ப்பூர் - 92500 ரூபாய், லக்னோ - 92500 ரூபாய், கோயம்புத்தூர் - 97100 ரூபாய், மதுரை - 97100 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 27.10 - 6,004 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,994 ரூபாய்,
மலேசியா - MYR 348 - 6,170 ரூபாய்,
ஓமன் - OMR 27.95 - 6,063 ரூபாய்,
கத்தார் - QAR 266 - 6,094 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 268 - 5,966 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.50 - 6,086 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 262.50 - 5,969 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,930 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 262.50 - 5,969 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 262.50 - 5,969 ரூபாய்,
துபாய் (UAE) - AED 262.50 - 5,969 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 262.50 - 5,969 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 262.50 - 5,969 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 262.50 - 5,969 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 266 - 6,094 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.95 - 6,063 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 268 - 5,966 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 28.80 - 6,381 ரூபாய்,
குவைத் - KWD 23.40 - 6,375 ரூபாய்,
மலேசியா - MYR 364 - 6,453 ரூபாய்,
ஓமன் - OMR 29.80 - 6,465 ரூபாய்,
கத்தார் - QAR 283.50 - 6,495 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 288 - 6,411 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 109 - 6,734 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 283.50 - 6,446 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,305 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 283.50 - 6,446 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 283.50 - 6,446 ரூபாய்,
துபாய் (UAE) - AED 283.50 - 6,446 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 283.50 - 6,446 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 283.50 - 6,446 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 283.50 - 6,446 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 283.50 - 6,495 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.80 - 6,465 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,411 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+