சென்னை: தங்கம் விலை நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட காரணத்தால் தினமும் நாள்காட்டியில் தேதியை கிழிப்பது போல், தினமும் தங்கம் விலையைப் பார்ப்பது மக்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. தங்கம் விலை உயர்ந்தாலும் மகிழ்ச்சி, குறைந்தாலும் மகிழ்ச்சி என்ற வகையில் சமமான மக்களைக் கூட்டத்தைக் கொண்டு இருக்கிறது இந்தியா.
இந்தியாவில் தங்கம் வாங்குவோருக்கு விலை குறைந்தால் மகிழ்ச்சி, ஏற்கனவே தங்கத்தை வாங்கி வைத்துள்ளவர்களுக்குத் தங்கம் விலை உயர்ந்தால் மகிழ்ச்சி. இப்படி தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நன்மை பெறும் மக்கள் கூட்டம் இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தங்கம் விலை கடந்த 2 வாரமாக மந்த நிலையை எதிர்கொண்ட நிலையில் 28ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்தது. ஆனால் அடுத்த நாளே தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்து, இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்த நிலையில், தங்க விலை சரிவு கண்டது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி அறிக்கை மற்றும் வேலையின்மை கோரிக்கைகள் ஆகியவை அமெரிக்க மத்திய வங்கி Federal Reserve (Fed) செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தைப் பெரிய அளவில் குறைக்கும் எதிர்பார்ப்பை ஓரம்கட்டியுள்ளது.
இதன் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்துள்ளது, மீண்டும் பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரித்து டாலர் மதிப்பு உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர், பாதுகாப்பான சொத்துக்களான தங்கத்திற்குத் தேவையைத் தொடர்ந்து சந்தையில் இருந்து வருகிறது.
முதலீட்டாளர்கள் தற்போது, பெடரல் ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை எவ்வளவு குறைக்கும் என்பதை தெரிந்துகொள்ள அமெரிக்காவின் பணவீக்க உயர்வு குறித்த தரவுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது.
பெடரல் ரிசர்வ் பணவீக்க தரவில் தனிப்பட்ட நுகர்வு செலவு (PCE) விலைக் குறியீடு, ஜூலை மாதத்தில் 2.6% ஆக இருந்ததில் இருந்து 2.7% ஆக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட குறைவான அளவீடுகள் பதிவானால் வட்டி விகிதத்தை குறைக்கும் அளவையும், சுழற்சியை மாற்ற வழிவகுக்கும்.
இந்த நிலையில் இன்று சர்வதேச ஸ்பாட் தங்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடன் 2518 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. மேலும் காமெக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 2553 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.22 சதவீதம் குறைந்து 72,027 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 0.22 சதவீதம் குறைந்து 86,855 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 67,050 ரூபாயாக உள்ளது, 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 73,150 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 53,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 93,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 70 ரூபாய் குறைந்து 25,300 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,705 ரூபாய், மும்பை - 6,705 ரூபாய், டெல்லி - 6,720 ரூபாய், கொல்கத்தா - 6,705 ரூபாய், பெங்களூர் - 6,705 ரூபாய், ஹைதராபாத் - 6,705 ரூபாய், கேரளா - 6,705 ரூபாய், புனே - 6,705 ரூபாய், பரோடா - 6,710 ரூபாய், அகமதாபாத் - 6,710 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,720 ரூபாய், லக்னோ - 6,720 ரூபாய், கோயம்புத்தூர் - 6,705 ரூபாய், மதுரை - 6,705 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,315 ரூபாய், மும்பை - 7,315 ரூபாய், டெல்லி - 7,330 ரூபாய், கொல்கத்தா - 7,315 ரூபாய், பெங்களூர் - 7,315 ரூபாய், ஹைதராபாத் - 7,315 ரூபாய், கேரளா - 7,315 ரூபாய், புனே - 7,315 ரூபாய், பரோடா - 7,320 ரூபாய், அகமதாபாத் - 7,320 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,330 ரூபாய், லக்னோ - 7,330 ரூபாய், கோயம்புத்தூர் - 7,315 ரூபாய், மதுரை - 7,315 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53640 ரூபாய், மும்பை - 53640 ரூபாய், டெல்லி - 53760 ரூபாய், கொல்கத்தா - 53640 ரூபாய், பெங்களூர் - 53640 ரூபாய், ஹைதராபாத் - 53640 ரூபாய், கேரளா - 53640 ரூபாய், புனே - 53640 ரூபாய், பரோடா - 53680 ரூபாய், அகமதாபாத் - 53680 ரூபாய், ஜெய்ப்பூர் - 53760 ரூபாய், லக்னோ - 53760 ரூபாய், கோயம்புத்தூர் - 53640 ரூபாய், மதுரை - 53640 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,300 ரூபாய், மும்பை - 25,300 ரூபாய், டெல்லி - 25,300 ரூபாய், கொல்கத்தா - 25,300 ரூபாய், பெங்களூர் - 25,300 ரூபாய், ஹைதராபாத் - 25,300 ரூபாய், கேரளா - 25,300 ரூபாய், புனே - 25,300 ரூபாய், வதோதரா - 25,300 ரூபாய், அகமதாபாத் - 25,300 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 93,000 ரூபாய், மும்பை - 88,400 ரூபாய், டெல்லி - 88,000 ரூபாய், கொல்கத்தா - 88,000 ரூபாய், பெங்களூர் - 87,500 ரூபாய், ஹைதராபாத் - 93,000 ரூபாய், கேரளா - 93,000 ரூபாய், புனே - 88,400 ரூபாய், பரோடா - 88,000 ரூபாய், அகமதாபாத் - 88,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 88,000 ரூபாய், லக்னோ - 88,000 ரூபாய், கோயம்புத்தூர் - 93,000 ரூபாய், மதுரை - 93,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.30 - 6,519 ரூபாய்
குவைத் - KWD 22.92 - 6,295 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,703 ரூபாய்
ஓமன் - OMR 30.05 - 6,546 ரூபாய்
கத்தார் - QAR 286.50 - 6,591 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 289 - 6,459 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102.60 - 6,602 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.75 - 6,436 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,415 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 281.75 - 6,436 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 281.75 - 6,436 ரூபாய்
துபாய் (UAE) - AED 281.75 - 6,436 ரூபாய்
புஜைரா (UAE) - AED 281.75 - 6,436 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.75 - 6,436 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 281.75 - 6,436 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 286.50 - 6,591 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.05 - 6,546 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 289 - 6,459 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.10 - 6,920 ரூபாய்
குவைத் - KWD 25 - 6,866 ரூபாய்
மலேசியா - MYR 359 - 6,975 ரூபாய்
ஓமன் - OMR 31.95 - 6,960 ரூபாய்
கத்தார் - QAR 306 - 7,040 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 311 - 6,950 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 113 - 7,271 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 304.25 - 6,950 ரூபாய்
அமெரிக்கா - USD 81 - 6,792 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 304.25 - 6,950 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 304.25 - 6,950 ரூபாய்
துபாய் (UAE) - AED 304.25 - 6,950 ரூபாய்
புஜைரா (UAE) - AED 304.25 - 6,950 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 304.25 - 6,950 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 304.25 - 6,950 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 306 - 7,040 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.95 - 6,960 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 311 - 6,950 ரூபாய்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?



Click it and Unblock the Notifications