தங்கம் மீதான முதலீடுகள் இஸ்ரேல் - ஹமாஸ் பிரச்சனைக்கு மத்தியில் முக்கிய முதலீடாக மாறிள்ளது, முதலீட்டு சந்தையில் ஏற்படும் தடுமாற்றத்தை குறைக்க எப்போதும் தங்கம் முக்கிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் வேளையில்.. இந்த போரின் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் தங்கத்தில் அதிகப்படியான முதலீடுகள் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் குவிந்து வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகமாக தான் இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், சரஸ்வதி பூஜை தினத்தில் லட்சுமி கருணை காட்டியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் அடுத்த சில மாதங்களுக்கு உயர்ந்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நிலையில், கடந்த 2 நாட்களாக டாலர் மதிப்பும், அமெரிக்க பத்திர முதலீடுகளும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டாலர் இன்டெக்ஸ் 106.30 வரையில் உயர்ந்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரித்து அதன் லாப அளவுகள் 4.98 சதவீதமாக உள்ளது. இதனால் தங்கம் மீதான முதலீடுகள் இன்று காலை வர்த்தகத்தில் கணிசமாக குறைந்து அதன் விலையும் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1981 டாலரில் இருந்து 1965 டாலர் வரையில் சரிந்துள்ளது. இந்திய வர்த்தக சந்தை திறந்த பின்பு இதன் விலை 1974 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் அளவீட்டை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்த நிலையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் 0.31 சதவீதம் சரிந்து 60,550.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.40 சதவீதம் சரிந்து 72,615.00 ரூபாயாக உள்ளது.
சென்னை ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 56,600 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 61,750 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 49,400 ரூபாயாக உள்ளது.
மேலும் உள்நாட்டு ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 200 ரூபாய் குறைந்து 78,500 ரூபாயாக உள்ளது. இதோடு பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து 23,850 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications