தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கப்பட்ட சுங்க வரியை மத்திய பட்ஜெட்டில் குறைத்ததால், நகை கடைகளுக்கு தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைமை தான். இதேவேளையில் அடுத்த சில மாதங்கள் திருமண சீசன், தீபாவளி என தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் விலை சரிவைப் பயன்படுத்திக்கொண்டு முன்கூட்டியே தங்கத்தை வாங்க மக்கள் அவசர அவசரமாக நகை கடைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
மேலும், விலை வரி குறைப்பால் இந்தியாவில் திடீரென அதிகரிக்கும் தங்கம் தேவையின் காரணமாக, வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்படும் என்றும் இதன் மூலம் அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது. இதனால் மத்திய அரசு வரியை மீண்டும் உயர்த்தப்படும் என்ற அச்சமும் மக்களிடையே நிலவுகிறது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு சந்தையான இந்தியாவில், தங்கத்தின் விலை குறைந்ததால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மக்கள் நகை கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாகத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.74,000 ஐ எட்டியதால் வாங்க முடியாமல் போனது, இந்த விலை குறைப்பை பயன்படுத்திக்கொள்ள அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
மத்திய அரசு பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்புக்குப் பிறகு இந்திய ரீடைல் சந்தையில் தங்கத்தின் தினசரி தேவை 20% வரை அதிகரித்ததால், நகைத் தொழிலாளர்களின் விடுமுறைகளைக் கூட ரத்து செய்துள்ளனர் நகை வியாபாரிகள். இந்தத் தீபாவளி சீசன் வரை இந்த வளர்ச்சி தொடரும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்தக் காலாண்டில் 20% தேவை அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் வரும் ரக்ஷா பந்தன் திருநாளில் முதல் பெரிய கொள்முதல் நடைபெறும் என்றும் கணிக்கப்படுகிறது. கடந்த ஜூன் காலாண்டில், அதிக விலையால் தங்கம் நகை விற்பனை 15% குறைந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் திருமணங்களுக்குத் தேவையான பெரிய எடை கொண்ட நகைகளுக்கான ஆர்டர்களை வாடிக்கையாளர்கள் செய்து வருகின்றனர் என்றும், தீபாவளி மற்றும் தனத்திரேயஸ் பண்டிகைக்குத் தேவையான நகைகளுக்கும் முன்பதிவு தொடங்கியுள்ளது என்றும் நகை கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுங்க வரி குறைந்ததைத் தொடர்ந்து நகை வியாபாரிகள் புதிய மற்றும் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கைப்பற்றும் வகையில் புதிய முன்பதிவு திட்டங்களையும், முன்பதிவுக்குக் கூடுதல் சலுகையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மும்பையின் பிரபல தங்க நகை வர்த்தக பகுதியான ஜாவேரி பஜாரில் உள்ள உமேத்மால் திலோக் சந்த் ஜாவேரி நகை கடையின் உரிமையாளர் குமார் ஜெயின் கூறுகையில் "திடீரென அதிகரித்துள்ள தங்க நகைக்கான தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்த ஏழு நாட்களுக்கு எங்களின் தங்க நகை செய்யும் தங்க கைவினைஞர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications