தங்கம் கொடுக்கும் அற்புத வாய்ப்பு! Credit Suisse சொன்னது நடந்துடும் போலருக்கே!

தங்கம் விலை (Gold Price) கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு, இதுவரை தங்கம் விலை ஒரு நல்ல ஏற்றத்தைக் காணவில்லை.

சொல்லப் போனால், செப்டம்பர் மாத தொடக்கத்தில் தொட்ட விலையைக் கூட, தற்போது தொட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது தங்கம்.

இத்தனை நாள் தங்கத்தில் முதலீடு செய்து கொண்டு இருந்த மக்கள், தற்போது தங்கத்தில் முதலீடு செய்ய தயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

எதை பார்க்கப் போகிறோம்

எதை பார்க்கப் போகிறோம்

தற்போது சென்னையில் ஆபரணத் தங்கம் விலை என்ன? சர்வதேச தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் தங்கம் விலை என்ன? இந்த தங்கம் விலை எல்லாம் தங்களின் உச்ச விலையில் இருந்து எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டு இருக்கின்றன? ஏன் தொடர்ந்து விலை சரிந்து வருகிறது? வருங்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும் என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம். முதலில் Chennai Gold rate-ல் இருந்து தொடங்குவோம்.

தங்கம் விலை (24 கேர்ட் & 22 கேரட்)

தங்கம் விலை (24 கேர்ட் & 22 கேரட்)

நம் சிங்காரச் சென்னையில், நேற்று (24 செப் 2020) 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் விலை 5,187 ரூபாய். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 47,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் விலை 4,755 ரூபாய்.

ரூ.7,260 (24 கேரட் 10 கிராம்) தங்கம் விலை வீழ்ச்சி

ரூ.7,260 (24 கேரட் 10 கிராம்) தங்கம் விலை வீழ்ச்சி

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 2020-ல் 59,130 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக தற்போது அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 7,260 ரூபாய் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

ரூ. 6,650 ஆபரணத் தங்கம் விலை வீழ்ச்சி

ரூ. 6,650 ஆபரணத் தங்கம் விலை வீழ்ச்சி

அதே போல மெரினா கடற்கரை கொண்ட சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 2020-ல் 54,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் நேற்று 47,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக தற்போது அதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 6,650 ரூபாய் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

MCX Gold price

MCX Gold price

இன்று (25 செப் 2020), அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 49,904 ரூபாயில் இருந்து 125 ரூபாய் (0.25 %) விலை இறக்கம் கண்டு 49,779 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக (செப் 23 & 24) எம் சி எக்ஸ் தங்கம் விலை 50,000 ரூபாய்க்குக் கீழ் வர்த்தகம் நிறைவடைந்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

6,412 ரூபாய் தங்கம் விலை வீழ்ச்சி

6,412 ரூபாய் தங்கம் விலை வீழ்ச்சி

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம் சி எக்ஸ்) தங்கம் விலை, கடந்த ஆகஸ்ட் 2020-ல் அதிகபட்சமாக 56,191 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அந்த விலையில் இருந்து, இன்றைய 49,779 ரூபாயைக் கணக்கிட்டால், 6,412 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

20,094 ரூபாய் எம் சி எக்ஸ் வெள்ளி விலை வீழ்ச்சி

20,094 ரூபாய் எம் சி எக்ஸ் வெள்ளி விலை வீழ்ச்சி

டிசம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் விலை, நேற்றைய குளோசிங் விலையான 59,629 ரூபாயை விட 320 ரூபாய் (0.54 %) விலை வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. ஆகஸ்ட் 2020-ல் 79,723 ரூபாயைத் தொட்டு வர்த்தகமான வெள்ளி விலையை, இன்றைய 59,629 ரூபாய் உடன் ஒப்பிட்டால் 20,094 ரூபாய் விலை வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது.

XAU USD - தங்கம் விலை

XAU USD - தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலையும் கடந்த 19 செப் 2020 முதல் பலத்த சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று சர்வதேச தங்கம் 1,868 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 2.09 டாலர் (0.11 %) விலை அதிகரித்து 1,870 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

193 டாலர் (9.35 %) காலி

193 டாலர் (9.35 %) காலி

ஆகஸ்ட் 2020 மாதத்தில், சர்வதேச தங்கம் விலை, அதிகபட்சமாக 2,063 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. அதை இன்றைய 1,870 டாலர் உடன் ஒப்பிட்டால் 193 டாலர் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. இது 9.35 % விலை வீழ்ச்சி. இந்த அளவுக்கு தங்கம் விலை வீழ்ச்சி காண்பதற்கான காரணம் என்ன? வாங்க பாப்போம்.

மாஸ் காட்டும் அமெரிக்க டாலர்

மாஸ் காட்டும் அமெரிக்க டாலர்

யூரோ, எண், கனடா டாலர், பவுண்ட் ஸ்டெர்லிங், ஸவீடிஷ் க்ரோனா, சுவிஸ் ஃப்ராங்க் என ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலர் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவது டாலர் இண்டெக்ஸ். இந்த டாலர் இண்டெக்ஸ் அதிகரித்தால் டாலர் மதிப்பு அதிகரிப்பதாகப் பொருள். கடந்த 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு டாலர் இண்டெக்ஸ் 94.27 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதோடு நேற்று முதல் முறையாக 94 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலரால் தங்கத்தில் முதலீடு சரிவு

அமெரிக்க டாலரால் தங்கத்தில் முதலீடு சரிவு

அமெரிக்க டாலர் பலமடைந்தால், தானாகவே, மற்ற நாட்டு கரன்சிகள் பலவீனமடையும். எனவே, மற்ற நாட்டுக்காரர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். எனவே தங்கத்தில் முதலீடுகள் குறையும். நேற்று (24 செப் 2020) உலகின் மிகப் பெரிய தங்க ட்ரஸ்டான SPDR ட்ரஸ்டின் ஹோல்டிங்ஸ் அதிகரிக்கவில்லை. 24 செப் 2020 அன்றைய குளோசிங்கில் இருந்த, அதே 1,267.14 டன்னாகத் தான் இருக்கிறது. ஆக தங்கத்தில் புதிய முதலீடுகள் வரவில்லை என்பதை இதிலிருந்தே பார்க்க முடிகிறது.

தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம்

தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம்

சர்வதேச தங்கம் விலை 1,900 டாலரை உடைத்துக் கொண்டு கீழே போனதால், சர்வதேச தங்கம் விலையில் நல்ல கரெக்‌ஷன் வரும் வரை, ஒரு வித அழுத்தம் இருக்கலாம் என்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் கம்பெனி. இவைகளை எல்லாம் பார்க்கும் போது Credit suisse சொன்னது போல, தங்கம் விலை 1,726 டாலரைத் தொட்டுவிடும் போலத் தெரிகிறது. எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும்?

தங்கம் விலை கணிப்புகள்

தங்கம் விலை கணிப்புகள்

தற்போது 1,726 டாலர் வரை சரியலாம் எனச் சொல்லி இருக்கும் க்ரெடிட் சூசி தான், எதிர்காலத்தில் இதே சர்வதேச தங்கம் விலை 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. ஜிம் ராஜர்ஸ் என்கிற உலகப் புகழ் பெற்ற கமாடிட்டி முதலீட்டாளர்ம்m தங்கம் நல்ல விலை ஏற்றம் காணும் எனச் சொல்லி தன் பணத்தை முதலீடு செய்து வருகிறார். கோல்ட்மேன் சாக்ஸ் கம்பெனியும் 2,300 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. பேங்க் ஆஃப் அமெரிக்கா 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. எனவே தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம்.

தங்கம் கொடுக்கும் அற்புத வாய்ப்பு

தங்கம் கொடுக்கும் அற்புத வாய்ப்பு

அடுத்த சில ஆண்டுகளில், தங்கம் சிறப்பாக விலை ஏறும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? அப்படி என்றால், தங்கம் விலை சரியும் போது எல்லாம், மெல்ல தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். எதிர்காலத்தில் நல்ல விலைக்கு வரும் போது விற்று லாபம் பார்க்கலாம். முதலீடு செய்வதற்கு முன், உங்கள் நிதி ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு முதலீடுகளைத் தொடருங்கள். தங்கம் கொடுக்கும் இந்த அற்புத வாய்ப்பை முதலீடு செய்ய விரும்புபவர்கள் தவறவிட்டுவிடாதீர்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+