தங்கம் விலை தொடர்ந்து உயர்வாகவே இருந்த காரணத்தால் பலர் தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக நகை கடைகள் வழங்கும் தங்க சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதை அதிகரித்தனர். இந்த நிலையில் தங்கத்தை பிள்ளைகள் கல்வி, சொந்த வீடு, திருமணம் போன்ற முக்கியமான விஷயங்களுக்காக சேமிக்க திட்டமிடும் அனைத்து மிடில் கிளாஸ் மக்களுக்கும் இந்த செய்தி ஜாக்பாட் ஆகவே இருக்கும்.
சர்வதேச சந்தையில் டாலரின் ஆதிக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது, இதேபோல் அமெரிக்க பத்திர முதலீடுகளில் கிடைக்கும் லாபமும் அதிகரித்துள்ளதால் தங்கம் மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்துள்ளது. ஐரோப்பிய சந்தையும் பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் எப்போது கச்சா எண்ணெய் 100 டாலர எட்டும் என்ற பீதியில் இருக்கிறது.

இப்படி வல்லரசு நாடுகளின் வர்த்தக சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் இந்திய மக்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர் சரிவில் இருக்கிறது தங்கம் விலை. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1896 டாலரில் இருந்து 1877 டாலர் வரையில் குறைந்த நிலையில் இன்று 1874 டாலருக்கு குறைந்து சந்தையின் போக்கும் தொடர் சரிவிலேயே உள்ளது.
இந்த நிலையில் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.21 சதவீதம் சரிந்து 58,163 ரூபாயாக பியூச்சர்ஸ் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.03 சதவீதம் சரிந்து 70,529 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையிலும், இந்தியாவின் பியூச்சர்ஸ் சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளதால் ரீடைல் சந்தையில் பெரிய சரிவு பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 560 ரூபாய் குறைந்து 54,100 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 760 ரூபாய் குறைந்து 59,020 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 43,280 ரூபாயாக உள்ளது. மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 76,500 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,100 ரூபாய், மும்பை - 53,900 ரூபாய், டெல்லி - 54,050 ரூபாய், கொல்கத்தா - 53,900 ரூபாய், பெங்களூர் - 53,900 ரூபாய், ஹைதராபாத் - 53,900 ரூபாய், கேரளா - 53,900 ரூபாய், புனே - 53,900 ரூபாய், பரோடா - 53,950 ரூபாய், அகமதாபாத் - 53,950 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,050 ரூபாய், லக்னோ - 54,050 ரூபாய், கோயம்புத்தூர் - 54,100 ரூபாய், மதுரை - 54,100 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,020 ரூபாய், மும்பை - 58,800 ரூபாய், டெல்லி - 58,950 ரூபாய், கொல்கத்தா - 58,800 ரூபாய், பெங்களூர் - 58,800 ரூபாய், ஹைதராபாத் - 58,800 ரூபாய், கேரளா - 58,800 ரூபாய், புனே - 58,800 ரூபாய், பரோடா - 58,850 ரூபாய், அகமதாபாத் - 58,850 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,950 ரூபாய், லக்னோ - 58,950 ரூபாய், கோயம்புத்தூர் - 59,020 ரூபாய், மதுரை - 59,020 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43280 ரூபாய், மும்பை - 43120 ரூபாய், டெல்லி - 43240 ரூபாய், கொல்கத்தா - 43120 ரூபாய், பெங்களூர் - 43120 ரூபாய், ஹைதராபாத் - 43120 ரூபாய், கேரளா - 43120 ரூபாய், புனே - 43120 ரூபாய், பரோடா - 43160 ரூபாய், அகமதாபாத் - 43160 ரூபாய், ஜெய்ப்பூர் - 43240 ரூபாய், லக்னோ - 43240 ரூபாய், கோயம்புத்தூர் - 43280 ரூபாய், மதுரை - 43280 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76500 ரூபாய், மும்பை - 74200 ரூபாய், டெல்லி - 74200 ரூபாய், கொல்கத்தா - 74200 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 76500 ரூபாய், கேரளா - 76500 ரூபாய், புனே - 74200 ரூபாய், பரோடா - 74200 ரூபாய், அகமதாபாத் - 74200 ரூபாய், ஜெய்ப்பூர் - 74200 ரூபாய், லக்னோ - 74200 ரூபாய், கோயம்புத்தூர் - 76500 ரூபாய், மதுரை - 76500 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!



Click it and Unblock the Notifications