அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி பென்ச்மார்க் வட்டி விகிதத்தை தனது நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்த காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் பெரிய அளவில் குறைந்து இன்று தங்கம் வாங்குவோருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்வு குறித்த முடிவுகள் கட்டாயம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறை வட்டி உயர்வு இல்லை என்றாலும் 2023 க்குள் கட்டாயம் வட்டி உயர்வு இருக்கும் என தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 100 டாலரை நோக்கி பயணிக்கும் காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம்.

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் துவக்கத்தில் இருந்து தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தை மற்றும் பிற முதலீட்டு சந்தைக்குள் நுழைந்த காரணத்தால் சர்வேதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா சந்தையிலும் எதிரொலித்து இந்திய மக்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை என்பது 1946.69 டாலரில் இருந்து 1925 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் எம்சிஎஸ் சந்தையிலும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.58 சதவீதம் சரிந்து தொடர்ந்து 59,062.00 விலையில் அக்டோபர் மாத பியூச்சர் ஆர்டர் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 1.10 சதவீதம் சரிந்து 72,428 ரூபாயாக உள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் சரிந்து 60,330 ரூபாய்க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் சரிந்து 55,300 ரூபாயாக சரிந்துள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் சரிந்து 44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரீடைல் சந்தையில் இன்று வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 78000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,300 ரூபாய், மும்பை - 55,050 ரூபாய், டெல்லி - 55,200 ரூபாய், கொல்கத்தா - 55,050 ரூபாய், பெங்களூர் - 55,050 ரூபாய், ஹைதராபாத் - 55,050 ரூபாய், கேரளா - 55,050 ரூபாய், புனே - 55,050 ரூபாய், பரோடா - 55,100 ரூபாய், அகமதாபாத் - 55,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,200 ரூபாய், லக்னோ - 55,200 ரூபாய், கோயம்புத்தூர் - 55,300 ரூபாய், மதுரை - 55,300 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,330 ரூபாய், மும்பை - 60,050 ரூபாய், டெல்லி - 60,200 ரூபாய், கொல்கத்தா - 60,050 ரூபாய், பெங்களூர் - 60,050 ரூபாய், ஹைதராபாத் - 60,050 ரூபாய், கேரளா - 60,050 ரூபாய், புனே - 60,050 ரூபாய், பரோடா - 60,100 ரூபாய், அகமதாபாத் - 60,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,200 ரூபாய், லக்னோ - 60,200 ரூபாய், கோயம்புத்தூர் - 60,330 ரூபாய், மதுரை - 60,330 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44240 ரூபாய், மும்பை - 44040 ரூபாய், டெல்லி - 44160 ரூபாய், கொல்கத்தா - 44040 ரூபாய், பெங்களூர் - 44040 ரூபாய், ஹைதராபாத் - 44040 ரூபாய், கேரளா - 44040 ரூபாய், புனே - 44040 ரூபாய், பரோடா - 44080 ரூபாய், அகமதாபாத் - 44080 ரூபாய், ஜெய்ப்பூர் - 44160 ரூபாய், லக்னோ - 44160 ரூபாய், கோயம்புத்தூர் - 44240 ரூபாய், மதுரை - 44240 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78000 ரூபாய், மும்பை - 74500 ரூபாய், டெல்லி - 74500 ரூபாய், கொல்கத்தா - 74500 ரூபாய், பெங்களூர் - 74250 ரூபாய், ஹைதராபாத் - 78000 ரூபாய், கேரளா - 78000 ரூபாய், புனே - 74500 ரூபாய், பரோடா - 74500 ரூபாய், அகமதாபாத் - 74500 ரூபாய், ஜெய்ப்பூர் - 74500 ரூபாய், லக்னோ - 74500 ரூபாய், கோயம்புத்தூர் - 78000 ரூபாய், மதுரை - 78000 ரூபாய்.


Click it and Unblock the Notifications