திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஈரான் அதிபர் மரணம், சவுதி அரசரின் உடல்நல கோளாறு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த நம்பிக்கை, தொடர்ந்து 14 மாதங்களாகத் தங்கத்தை வாங்கும் சீனா ஆகியவை தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக இருந்ததது. ஆனால் அடுத்த நாளே தங்கம் விலை டக்குன்னு சரிய முக்கியமான காரணம் அமெரிக்க வட்டி விகித முடிவுகள் தான்.
திங்கட்கிழமை வெளியான கணிப்புகளின் படி அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு 2 முறை தலா 0.25 சதவீதம் வட்டி விகிதம் குறைக்கும், இது நவம்பர் மாதம் துவங்கும் என கணிக்கப்பட்டதால் பத்திர சந்தையில் இருந்த முதலீடுகள் வெளியேறித் தங்கத்தின் மீது குவிந்தது.

ஆனால் நேற்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் பேசுகையில், அமெரிக்காவின் பணவீக்கம் தொடர்ந்து சரியும் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே வட்டி விகிதத்தை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று தங்கம் விலை டக்கு டக்குன்னு குறைய துவங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று வரலாற்று உச்ச அளவான 2441 டாலர் அளவீட்டை தொட்ட நிலையில், இன்று 2409 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆசிய சந்தையில் ஏற்பட்ட சரிவு அமெரிக்க வர்த்தகத்திலும் எதிரொலிக்கும் என கணிக்கப்படும் காரணத்தால் நாளையும் விலை குறைய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இன்றும் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் ஜூன் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 0.67 சதவீதம் சரிந்து 73,867 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை ஒரு கிலோ 1.44 சதவீதம் சரிந்து 93,895 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் குறைந்து 68,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 74,840 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 54,880 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 2000 ரூபாய் குறைந்து 99000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1500 ரூபாய் குறைந்து 27,660 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,860 ரூபாய், மும்பை - 6,830 ரூபாய், டெல்லி - 6,845 ரூபாய், கொல்கத்தா - 6,830 ரூபாய், பெங்களூர் - 6,830 ரூபாய், ஹைதராபாத் - 6,830 ரூபாய், கேரளா - 6,830 ரூபாய், புனே - 6,830 ரூபாய், பரோடா - 6,835 ரூபாய், அகமதாபாத் - 6,835 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,845 ரூபாய், லக்னோ - 6,845 ரூபாய், கோயம்புத்தூர் - 6,860 ரூபாய், மதுரை - 6,860 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,484 ரூபாய், மும்பை - 7,451 ரூபாய், டெல்லி - 7,466 ரூபாய், கொல்கத்தா - 7,451 ரூபாய், பெங்களூர் - 7,451 ரூபாய், ஹைதராபாத் - 7,451 ரூபாய், கேரளா - 7,451 ரூபாய், புனே - 7,451 ரூபாய், பரோடா - 7,456 ரூபாய், அகமதாபாத் - 7,456 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,466 ரூபாய், லக்னோ - 7,466 ரூபாய், கோயம்புத்தூர் - 7,484 ரூபாய், மதுரை - 7,484 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54880 ரூபாய், மும்பை - 54640 ரூபாய், டெல்லி - 54760 ரூபாய், கொல்கத்தா - 54640 ரூபாய், பெங்களூர் - 54640 ரூபாய், ஹைதராபாத் - 54640 ரூபாய், கேரளா - 54640 ரூபாய், புனே - 54640 ரூபாய், பரோடா - 54680 ரூபாய், அகமதாபாத் - 54680 ரூபாய், ஜெய்ப்பூர் - 54760 ரூபாய், லக்னோ - 54760 ரூபாய், கோயம்புத்தூர் - 54880 ரூபாய், மதுரை - 54880 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,660 ரூபாய், மும்பை - 27,660 ரூபாய், டெல்லி - 27,660 ரூபாய், கொல்கத்தா - 27,660 ரூபாய், பெங்களூர் - 27,660 ரூபாய், ஹைதராபாத் - 27,660 ரூபாய், கேரளா - 27,660 ரூபாய், அகமதாபாத் - 27,660 ரூபாய், ஜெய்ப்பூர் - 27,660 ரூபாய், லக்னோ - 27,660 ரூபாய், கோயம்புத்தூர் - 27,660 ரூபாய், மதுரை - 27,660 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99000 ரூபாய், மும்பை - 94600 ரூபாய், டெல்லி - 94600 ரூபாய், கொல்கத்தா - 94600 ரூபாய், பெங்களூர் - 92500 ரூபாய், ஹைதராபாத் - 99000 ரூபாய், கேரளா - 99000 ரூபாய், புனே - 94600 ரூபாய், பரோடா - 94600 ரூபாய், அகமதாபாத் - 94600 ரூபாய், ஜெய்ப்பூர் - 94600 ரூபாய், லக்னோ - 94600 ரூபாய், கோயம்புத்தூர் - 99000 ரூபாய், மதுரை - 99000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.10 - 6,210 ரூபாய்,
குவைத் - KWD 23 - 6,243 ரூபாய்,
மலேசியா - MYR 360 - 6,392 ரூபாய்,
ஓமன் - OMR 29.15 - 6,309 ரூபாய்,
கத்தார் - QAR 276 - 6,309 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 280 - 6,220 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 101.60 - 6,281 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 270.50 - 6,136 ரூபாய்,
அமெரிக்கா - USD 74 - 6,165 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 270.50 - 6,136 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 270.50 - 6,136 ரூபாய்,
துபாய் (UAE) - AED 270.50 - 6,136 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 270.50 - 6,136 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 270.50 - 6,136 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 270.50 - 6,136 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 276 - 6,309 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.15 - 6,309 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 280 - 6,220 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.90 - 6,608 ரூபாய்,
குவைத் - KWD 24.40 - 6,623 ரூபாய்,
மலேசியா - MYR 376 - 6,676 ரூபாய்,
ஓமன் - OMR 30.70 - 6,645 ரூபாய்,
கத்தார் - QAR 294.50 - 6,731 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 301 - 6,686 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 111 - 6,862 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 292.25 - 6,629 ரூபாய்,
அமெரிக்கா - USD 78.50 - 6,540 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 292.25 - 6,629 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 292.25 - 6,629 ரூபாய்,
துபாய் (UAE) - AED 292.25 - 6,629 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 292.25 - 6,629 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 292.25 - 6,629 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 292.25 - 6,629 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 294.50 - 6,731 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30.70 - 6,645 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 301 - 6,686 ரூபாய்.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?



Click it and Unblock the Notifications