தங்கம் விலை 3 மாத சரிவு.. கேட்வே இனிமையா இருக்கே, பசுபதி வண்டிய நகை கடைக்கு விடு..!

தங்கம் எப்போதும் சாமானிய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் வேளையில் இன்று சர்வதேச முதலீட்டு சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் கடந்த 3 மாதத்தில் மிகவும் குறைவான அளவீட்டை தொட்டு உள்ளது. இதேவேளையில் தங்கம் மீதான முதலீடுகள் அதிகளவில் பங்குச்சந்தைக்கும், பத்திர சந்தைக்கும் மாறியுள்ள காரணத்தால் இன்று தங்கம் விலை பெரிய அளவில் சரிந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகித உயர்வு குறித்த தகவல்களை தொடர்ந்து, அமெரிக்க டாலர் உயர்வின் காரணமாக தங்கம் விலை குறைந்துள்ளது. இதேபோல் அமெரிக்க முதலீட்டாளர்கள் பத்திர சந்தையில் முதலீடு செய்ய தயாராகி வருகிறார்கள்.

தங்கம் விலை 3 மாத சரிவு.. கேட்வே இனிமையா இருக்கே, பசுபதி வண்டிய நகை கடைக்கு விடு..!

அமெரிக்க டாலர் உயர்வின் காரணமாக இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3 மாதத்தில் குறைவான விலையை பதிவு செய்துள்ளது, ஒரு அவுன்ஸ் 245 கேரட் தங்கம் விலை நேற்ரு 1929 டாலராக இருந்த நிலையில் இன்று 1907 டாலராக குறைந்துள்ளது. இது தொடரும் பட்சத்தில் விரைவில் 1900 டாலர் என்ற முக்கிய அளவீட்டை இழக்கும்.

இதேவேளையில் இந்தியாவில் MCX சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை 0.21 சதவீதம் சரிந்து 57,985 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.71 சதவீதம் சரிந்து 68,851 ரூபாயாக உள்ளது.

ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் சரிந்து 58,960 ரூபாய் வரையில் சரிந்துள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் சரிந்து 54,050 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 240 ரூபாய் சரிந்து 43,240 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 400 ரூபாய் உயர்ந்து 71,900 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,460 ரூபாய், மும்பை - 54,050 ரூபாய், டெல்லி - 54,200 ரூபாய், கொல்கத்தா - 54,050 ரூபாய், பெங்களூர் - 54,050 ரூபாய், ஹைதராபாத் - 54,050 ரூபாய், கேரளா - 54,050 ரூபாய், புனே - 54,050 ரூபாய், பரோடா - 54,100 ரூபாய், அகமதாபாத் - 54,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,200 ரூபாய், லக்னோ - 54,200 ரூபாய், கோயம்புத்தூர் - 54,460 ரூபாய், மதுரை - 54,460 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,410 ரூபாய், மும்பை - 58,960 ரூபாய், டெல்லி - 59,110 ரூபாய், கொல்கத்தா - 58,960 ரூபாய், பெங்களூர் - 58,960 ரூபாய், ஹைதராபாத் - 58,960 ரூபாய், கேரளா - 58,960 ரூபாய், புனே - 58,960 ரூபாய், பரோடா - 59,010 ரூபாய், அகமதாபாத் - 59,010 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,110 ரூபாய், லக்னோ - 59,110 ரூபாய், கோயம்புத்தூர் - 59,410 ரூபாய், மதுரை - 59,410 ரூபாய்.

தங்கம் விலை 3 மாத சரிவு.. கேட்வே இனிமையா இருக்கே, பசுபதி வண்டிய நகை கடைக்கு விடு..!

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43568 ரூபாய், மும்பை - 43240 ரூபாய், டெல்லி - 43360 ரூபாய், கொல்கத்தா - 43240 ரூபாய், பெங்களூர் - 43240 ரூபாய், ஹைதராபாத் - 43240 ரூபாய், கேரளா - 43240 ரூபாய், புனே - 43240 ரூபாய், பரோடா - 43280 ரூபாய், அகமதாபாத் - 43280 ரூபாய், ஜெய்ப்பூர் - 43360 ரூபாய், லக்னோ - 43360 ரூபாய், கோயம்புத்தூர் - 43568 ரூபாய், மதுரை - 43568 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 75700 ரூபாய், மும்பை - 71900 ரூபாய், டெல்லி - 71900 ரூபாய், கொல்கத்தா - 71900 ரூபாய், பெங்களூர் - 71250 ரூபாய், ஹைதராபாத் - 75700 ரூபாய், கேரளா - 75700 ரூபாய், புனே - 71900 ரூபாய், பரோடா - 71900 ரூபாய், அகமதாபாத் - 71900 ரூபாய், ஜெய்ப்பூர் - 71900 ரூபாய், லக்னோ - 71900 ரூபாய், கோயம்புத்தூர் - 75700 ரூபாய், மதுரை - 75700 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+