உலகளவில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், வியாழக்கிழமை ஆசிய வர்த்தகத்தில் கணிசமான தடுமாற்றத்தைச் சந்தித்து ஒரு அவுன்ஸ் 2380 டாலரில் இருந்து குறைந்து 2,370 டாலர் என வர்த்தகமாகி வருகிறது.
மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதால், தங்கத்தில் தொடர்ந்து முதலீட்டு அதிகரித்து வருகிறது. மேலும் இஸ்ரேல் ஈரான் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதால் தொடர்ந்து பதற்றமான நிலை உள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ஜோர்டானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அய்மன் சஃபாடி, புதன்கிழமை அரசு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட பேட்டியில், ஈரானிய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், அது முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் போருக்குள் இழுத்துச் செல்லும், இது உலகளவில் குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலிய விமானப்படை புதன்கிழமை, கிழக்கு லெபனானின் பால்பெக் வடக்கே ஹிஸ்புல்லாஹ் கட்டமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இடையே தீவிர மோதல்கள் அதிகரித்து மேலும் மோதல்கள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஈரானிடமிருந்து வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலளிப்பதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்திய நிலையில், இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பிற நாடுகளின் அறிவுரைகள் கேட்க வேண்டியது இல்லை, சொந்த முடிவுகளை எடுக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை மூக்கை உடைப்பது போல் உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க டாலர் குறியீட்டு (DXY) மதிப்பு குறைந்து வருகிறது, இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கப் பத்திர முதலீட்டின் லாபம் குறைவாக இருப்பதே. அமெரிக்க டாலரில் இந்த சரிவு, பிற நாணயங்களைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தை வாங்குவதை எளிதாக்குகிறது.
அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் பெடரல் ரிசர்வ் தலைவர் லொரெட்டா மெஸ்டர், புதன்கிழமை பேசுகையில், பணவீக்கம் எதிர்பார்ப்புகளை மீறி உயர்ந்துள்ளது என்று ஒப்புக்கொண்டார். 2% என்ற பணவீக்க இலக்கை நிலையானதாக உள்ளது ஒப்புக்கொள்வதற்கு முன்பு, கூடுதல் உறுதிப்படுத்தல் தேவை என்று அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve)க்கு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் செவ்வாய்க்கிழமை பேசுகையில், இந்த ஆண்டு பணவீக்கத்தில் குறைந்த முன்னேற்றமே காணப்படுவதாக சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, 2% என்ற இலக்கை அடைய இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்று தெரிவித்தார். இதனால் அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை ஜூன் மாதத்தில் குறைக்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளது.
தங்கம் விலை இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுக்கும் வரையில் குறைய வாய்ப்புகள் உள்ளது. இதுவரையில் இந்த சாதகமான நிலையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
More From GoodReturns

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

Wiproஇல் பங்கு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! 19% லாபத்தில் உங்க பங்குகளை விற்க செம வாய்ப்பு!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications