அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஜூலை 25-26 ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கணிப்புகள் கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில், முதலீட்டு சந்தையில் கடந்த சில நாட்களாக கணிசமான தடுமாற்றம் உருவாகியுள்ளது.
கடந்த வார கணிப்புகளில் வட்டி விகிதங்கள் உயர்வுக்கு வாய்ப்பு குறைவு என கணிக்கப்பட்ட நிலையில் இந்திய பங்குச்சந்தை முதல், உலகளவில் முதலீடுகள் அதிகரித்தது. தற்போது கணிப்புகள் மாறியதால் பங்குச்சந்தை கணிசமாக சரிவை எதிர்கொண்டு வருகிறது.

இதற்கு மத்தியில் கடந்த 2 வாரமாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் தற்போது அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தும் என கணிக்கப்பட்டு உள்ளதால் ஆசிய முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இன்று சர்வதேச தங்க முதலீட்டு சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது 1927.97 டாலரில் இருந்து 1909 டாலர் வரையில் குறைந்தது. ஆனால் சந்தை முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு இழப்பை ஈடுகட்ட தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியதால் கடந்த 2 மணிநேரத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1914 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் ஆகஸ்ட் மாதத்திற்கான பியூச்சர்ஸ் ஆர்டர்களின் விலை 0.08 சதவீதம் உயர்ந்து 58,448.00 ரூபாயாக உள்ளது. இதேவேளையில் வெள்ளி விலை 0.06 சதவீதம் சரிந்து 70,281.00 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் சரிந்து 54,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 90 ரூபாய் சரிந்து 59,070 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. மேலும் வெள்ளி விலை ஒரு கிலோ 700 ரூபாய் குறைந்து 72,300 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 54,570 ரூபாய், மும்பை - 54,150 ரூபாய், டெல்லி - 54,300 ரூபாய், கொல்கத்தா - 54,150 ரூபாய், பெங்களூர் - 54,150 ரூபாய், ஹைதராபாத் - 54,150 ரூபாய், கேரளா - 54,150 ரூபாய், புனே - 54,150 ரூபாய், பரோடா - 54,200 ரூபாய், அகமதாபாத் - 54,200 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,300 ரூபாய், லக்னோ - 54,300 ரூபாய், கோயம்புத்தூர் - 54,570 ரூபாய், மதுரை - 54,570 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,560 ரூபாய், மும்பை - 59,070 ரூபாய், டெல்லி - 59,220 ரூபாய், கொல்கத்தா - 59,070 ரூபாய், பெங்களூர் - 59,070 ரூபாய், ஹைதராபாத் - 59,070 ரூபாய், கேரளா - 59,070 ரூபாய், புனே - 59,070 ரூபாய், பரோடா - 59,120 ரூபாய், அகமதாபாத் - 59,120 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,220 ரூபாய், லக்னோ - 59,220 ரூபாய், கோயம்புத்தூர் - 59,560 ரூபாய், மதுரை - 59,560 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 43656 ரூபாய், மும்பை - 43320 ரூபாய், டெல்லி - 43440 ரூபாய், கொல்கத்தா - 43320 ரூபாய், பெங்களூர் - 43320 ரூபாய், ஹைதராபாத் - 43320 ரூபாய், கேரளா - 43320 ரூபாய், புனே - 43320 ரூபாய், பரோடா - 43360 ரூபாய், அகமதாபாத் - 43360 ரூபாய், ஜெய்ப்பூர் - 43440 ரூபாய், லக்னோ - 43440 ரூபாய், கோயம்புத்தூர் - 43656 ரூபாய், மதுரை - 43656 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 75700 ரூபாய், மும்பை - 72300 ரூபாய், டெல்லி - 72300 ரூபாய், கொல்கத்தா - 72300 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 75700 ரூபாய், கேரளா - 75700 ரூபாய், புனே - 72300 ரூபாய், பரோடா - 72300 ரூபாய், அகமதாபாத் - 72300 ரூபாய், ஜெய்ப்பூர் - 72300 ரூபாய், லக்னோ - 72300 ரூபாய், கோயம்புத்தூர் - 75700 ரூபாய், மதுரை - 75700 ரூபாய்.


Click it and Unblock the Notifications