தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் சாமானிய மக்கள் யாரும் வாங்க முடியாத நிலை இருந்தது, இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்தது மூலம் அடுத்த 2 மாதத்திற்கு இந்த நிலை தொடரும்.
இந்த ஒரு அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் பொருளாதார மந்த நிலை ஆகியவை தங்கம் மீதான முதலீட்டை பெரிய அளவில் குறைத்தது. இதனால் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வருகிறது, இது தந்தேராஸ், தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக குறைந்துள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1966 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1946 டாலர் வரையில் சரிந்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் தங்கம் விலை உயர்ந்திருந்தாலும் கடந்த ஒரு வாரத்தில் இது பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.31 சதவீதம் சரிந்து 59,825.00 ரூபாய் விலையிலும், வெள்ளி விலை 0.87 சதவீதம் சரிந்து 70,432 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் இந்திய ரீடைல் சந்தையிலும் இதன் தாக்கம் தெரிகிறது.
ரீடைல் சந்தை வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் குறைந்து 56100 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 500 ரூபாய் குறைந்து 61,250 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 44,920 ரூபாயாக உள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 300 ரூபாய் குறைந்து 76,200 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 500 ரூபாய் குறைந்து 23,310 ரூபாயாக உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டுமே தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் ரீடைல் சந்தையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications