தங்கம் மற்றும் வெள்ளி விலை வியாழக்கிழமை வர்த்தகத்தில் வரலற்று சாதனை உயரத்தை எட்டிய நிலை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்ததால், தங்கம் முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் பொருட்டு அதிகளவிலான தங்கத்தை முதலீட்டைக் கைகழுவினர்.
இந்த நிலையில் நாளை தங்கம் விலை எப்படியிருக்கும் என்பது பல கோடி மக்களின் கேள்வியாக இருக்கிறது. குறிப்பாகத் திருமணம் நிச்சயம் செய்தவர்கள் வீட்டில் தங்கம் விலை கொஞ்சமாவது குறைந்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் உள்ளது.

இந்த நிலையில் இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் 2024 முடியும் பியூச்சர் ஆர்டர்களின் தங்கம் விலை, நேற்றைய இறுதி விலையான ₹69,707 ஐ விட 0.50% குறைவான ₹69,297 என திறந்தது மாலையில் 69,659 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கம் விலை காலை வர்த்தகத்தில் $2,300 என்ற அளவைக் கடந்து, தற்போது ஒரு அவுன்ஸ் $2,275 டாலர் என்ற அளவில் ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும் அமெரிக்க வர்த்தக சந்தை திறந்தால் கூடுதலாக தங்கம் விலை சரிய வாய்ப்புகள் உள்ளது.
இன்று அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்ததால், முதலீட்டாளர்கள் லாபம் எடுக்கும் நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளியை விற்பனை செய்து வருகின்றனர். இதன் விளைவாக, தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்து வருகின்றன, இந்த சரிவு நாளையும் தொடரும் என்பது தான் வெள்ளிக்கிழமை மாலை வர்த்தக சந்தை கணிப்பு.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் குறைந்து 65,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் உயர்ந்து 71,020 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து 52,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் குறைந்து 85,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 500 ரூபாய் குறைந்து 24,620 ரூபாயாக உள்ளது. இந்த விலை நிலவரம் நாளை கணிசமாகக் குறைய வாய்ப்புகள் உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எதிர்காலத்தில் எந்த திசையில் செல்லும் என்பதைக் கணிப்பது கடினம். உலக பொருளாதார நிலவரம், பணவீக்க விகிதங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய காரணிகள் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளைப் பாதிக்கும். முதலீட்டாளர்கள் சந்தையைத் தொடர்ந்து கண்காணித்து, தங்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பது அவசியம்.


Click it and Unblock the Notifications