சரிவில் தங்கம் விலை! எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? பவுன் விலை நிலவரம் என்ன?

சர்வதேச தங்கம் தொடங்கி, இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்கம், சென்னையில் ஆபரணத் தங்கம் என எல்லா தங்கத்தின் விலையும், 01 செப்டம்பர் 2020 அன்று வர்த்தகமான விலையைத் தொடவே போராடிக் கொண்டு இருக்கின்றன.

இன்று காலையிலேயே தங்கம் விலை சரிவில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. இன்று தங்கம் என்ன விலையில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன?

எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும் என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். முதலில் ஆபரணத் தங்கத்தின் இருந்து தொடங்குவோம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

தமிழகத்தின் தலை நகரான சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 53,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக பவுனுக்கு 43,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,450-க்கு விற்பனை ஆனது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 39,560 ரூபாய்க்கு விற்றார்கள்.

ஆபரணத் தங்கம் 01 செப்டம்பர் 2020 விலை

ஆபரணத் தங்கம் 01 செப்டம்பர் 2020 விலை

24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 01 செப்டம்பர் 2020 அன்று 54,200 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,720 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். இன்று வரை இந்த விலையைத் தொட முடியாமல் தவிக்கிறது தங்கம்.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் தங்கம் விலை

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் தங்கம் விலை

இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்று 51,824 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 51,393 ரூபாய்க்கு, 431 ரூபாய் விலை சரிந்து (0.83 %) வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 01 செப்டம்பர் 2020 அன்று இதே தங்க காண்டிராக்டின் விலை 52,100 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

சரிவில் சர்வதேச தங்கம் விலை

சரிவில் சர்வதேச தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்று 1,959.26 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலையிலேயே சுமாராக 20 டாலர் வரை விலை சரிந்து (1.03 %) 1,939 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 01 செப்டம்பர் 2020 அன்று, இதே ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலை 1,970 டாலருக்கு நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம்

ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம்

அடுத்த சில ஆண்டுகளுக்கு, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட 0 சதவிகிதத்துக்கு அருகிலேயே வைத்திருக்கும் எனச் சொல்லி இருக்கிறது. இந்த செய்தியால் தங்கம் விலை ஏற்றம் கண்டு இருக்க வேண்டாம். ஆனால் தற்போது தங்கம் விலை பெரிய வீழ்ச்சி காணாமல் இருக்க, இந்த செய்தி உதவிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்க டாலர் கரன்சியின் பலம்

அமெரிக்க டாலர் கரன்சியின் பலம்

யூரோ, ஜப்பானிய யென் உட்பட, உலகின் ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் மதிப்பைக் காட்டும், டாலர் இண்டெக்ஸ், நேற்று 93.21 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலையிலேயே ஜோராக 93.59 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதாவது அமெரிக்க டாலர் வலுவடைந்து இருக்கிறது. இது தங்கத்தின் விலை ஏற்றத்தை தடுக்கும் காரணியாக அமைந்து இருக்கிறது.

அமெரிக்க பொருளாதார தரவுகள்

அமெரிக்க பொருளாதார தரவுகள்

அமெரிக்காவில், கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில், நுகர்வோர்கள் செலவழிப்பது குறைந்து இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கினாலும், வேலை வாய்ப்புகள் இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை. எனவே பொருளாதார வளர்ச்சியும் நிலை இல்லாமல் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல்.

முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் இல்லை

முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் இல்லை

தங்கத்தின் விலை, அமெரிக்க பொருளாதார தரவுகள், அமெரிக்க சீன பஞ்சாயத்துக்கள், பிரெக்ஸிட் போன்றவைகளால் சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவின் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் தாமதமும் தங்கம் விலை ஏற்றம் காணாமல் இருக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. தங்க இ டி எஃப்-களில் முதலீடுகள் குறறையத் தொடங்கி இருக்கின்றன. SPDR ETF-ன் தங்க ஹோல்டிங் 1,247.56 டன்னாக சரிந்து இருக்கிறது. இது ஜூலை 31-க்குப் பிறகான காலத்தில், மிகக் குறைந்த ஹோல்டிங் என்பது குறிப்பிடத்தக்கது என கணக்கு சொல்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.

சக்தி காந்த தாஸ்

சக்தி காந்த தாஸ்

இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், நேற்று (16 செப்டம்பர் 2020 புதன்கிழமை) ஒரு கூட்டத்தில் பேசிய போது, தங்கத்தின் விலை, கடந்த ஆகஸ்ட் 2020-ல் ஒரு உச்சத்தைத் தொட்டது, அதன் பின் பொருளாதாரம் மீண்டு வருவதால் தங்கம் விலை இறக்கம் காணத் தொடங்கி இருக்கிறது எனச் சொல்லி இருந்தார்.

10 நாளில் ஸ்டிமுலஸ் வரலாம்

10 நாளில் ஸ்டிமுலஸ் வரலாம்

நேற்று (16 செப் 2020), அமெரிக்க அரசு, டெமாக்ரெட் கட்சியினர்களிடம் பேசி, ஸ்டிமுலஸ் பேக்கேஜ் தொகையினை அதிகரிக்க இருக்கிறார்களாம். அதோடு அடுத்த வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் டீலை முடிக்க, சிக்னல் கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே சொன்னது போல ஸ்டிமுலஸ் பேக்கேஜ் வந்தால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

எதிர்காலத்தில் தங்கம் விலை

எதிர்காலத்தில் தங்கம் விலை

உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், வருங்காலத்தில் தங்கம் விலை ஒரு புதிய உச்சத்தைத் தொடும் எனச் சொல்லி இருக்கிறார். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,000 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு அவுன்ஸ் தங்கம் 2,300 டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறது. ஆக எதிர்காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+