சாமானிய மக்களின் முக்கிய சேமிப்பு கருவியாக இருக்கும் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது, புதிதாகத் தங்கம் வாங்குவோருக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தங்கத்தை பொறுத்தவரை நாம் எப்போது இதை நீண்ட கால முதலீடாகத் தான் பார்க்க வேண்டும், ஆனால் சில உலோக வர்த்தகர்கள் தங்கத்தின் விலை போக்கைக் கணித்துக் குறுகிய காலத்திலும் அதிகப்படியான வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 20 ரூபாய் குறைந்து ஒரு வாரச் சரிவைப் பதிவு செய்துள்ளது. தங்கம் விலை அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு காரணமாக அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. ஒரே வாரத்தில் 100 ரூபாயும் அதிகரித்துள்ளது, அடுத்த சில நாட்களில் ஏறியது மொத்தமும் இறங்கி வருகிறது.

இப்படியிருக்கையில் தங்கம் வாங்கும் போது சிறிய அளவிலான சந்தையின் வர்த்தக போக்கை புரிந்துகொண்டு வாங்குவது மிகவும் அவசியம். அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் மாதம் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைப்பதை எதிர்பார்த்தே தற்போது மொத்த முதலீட்டுச் சந்தையும் இயங்கி வருகிறது.
அமெரிக்க எளிதாக இந்த வட்டி விகிதத்தைக் குறைத்துவிடாது, வட்டி விகிதம் குறைத்தால் பணவீக்கம் குறைந்து, வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் வளர்ச்சி அடைய வேண்டும் அப்போது தான் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். இதற்கான பல தரவுகளைக் கணக்கிட வேண்டியுள்ளது, அதில் ஒன்று வியாழக்கிழமை வெளியானது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி முடிந்த வாரத்தில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை 228000ல் இருந்து 232000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை மார்ச் மாதம் பதிவான குறைவான அளவை காட்டிலும் 818000 வேலைவாய்ப்புகளை மட்டுமே புதிதாகச் சேர்த்துள்ளது. இது அனைத்தும் அமெரிக்கப் பத்திர சந்தையில் முதலீட்டை அதிகரித்து, டாலர் மதிப்பை உயர்த்தி, தங்கத்தை முக்கியமற்ற முதலீடாக மாற்றியுள்ளது.
இதேவேளையில் இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் ஜாக்சன் ஹோல் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்குபெறும் பெரும்பாலான பெடரல் ரிசர்வ் தலைவர்கள் கூறுகையில் வட்டி விகிதங்கள் குறைக்க இன்னும் உறுதியான தகவல்கள் தேவை எனக் கூறுகின்றனர். இதனாலேயே பத்திர சந்தையில் முதலீட்டை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வாரமாக 2500 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கம் விலை தடாலடியாக 2473 டாலர் வரையில் சரிந்து, ஒரு அவுன்ஸ்-க்கு 40 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் தற்போது சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2493 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.
ஆசியச் சந்தையில் தாக்கத்தின் காரணமாக இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்திற்கான அக்டோபர் ஆர்டர் விலை 0.25 சதவீதம் அதிகரித்த 71,375 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.47 சதவீதம் அதிகரித்து 84,127 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் எதிரொலிப்பது அனைத்தும் நேற்றைய வர்த்தக முடிவின் தாக்கத்திற்கானது, அந்த வகையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 66,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரள தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 72,650 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 53,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 91,700 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 250 ரூபாய் குறைந்து 25,680 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications