தங்கம் விலை கடந்த 3 வாரத்தில் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், சீன பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் பெரிய அளவிலான தடுமாற்றத்தையும் முதலீட்டு சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில் அனைத்து முதலீட்டாளர்களும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் முடிவுகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்துவதாலும், வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாலும் தங்கத்தின் விலை இன்று கடுமையாக குறைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த உள்ளதால் விரைவில் வட்டி உயர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதேவேளையில் இங்கிலாந்து மத்திய வங்கி (BoE) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவையும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகின்றன.
இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பாக ஆகியவை தனது பணவீக்க இலக்கான 2% அடைய திட்டமிட்டு உள்ளது. சீனாவின் மந்தமான பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பல சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் தற்போது பத்திர சந்தைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்கம் விலை வெள்ளிக்கிழமை முதல் குறைய துவங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1980 டாலரில் இருந்து 1961 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பில் தங்கம் விலை 1,60,882 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.36 சதவீதம் சரிந்து 59,340.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.08 சதவீதம் சரிந்து 75,389 ரூபாயாக உள்ளது. ஸ்பாட் மார்கெட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 59,191.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 74,435.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் குறைந்து 55,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் சரிந்து 60,760 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 44,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 400 ரூபாய் சரிந்து 82,000 ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் தங்க நகை வாங்க திட்டமிடும் அனைவருக்கும் இந்த வீக்எண்ட் மற்றும் அடுத்த வாரம் முழுவதும் சாதகமான சூழ்நிலையாக இருக்கும்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,700 ரூபாய், மும்பை - 55,400 ரூபாய், டெல்லி - 55,550 ரூபாய், கொல்கத்தா - 55,400 ரூபாய், பெங்களூர் - 55,400 ரூபாய், ஹைதராபாத் - 55,400 ரூபாய், கேரளா - 55,400 ரூபாய், புனே - 55,400 ரூபாய், பரோடா - 55,450 ரூபாய், அகமதாபாத் - 55,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,550 ரூபாய், லக்னோ - 55,550 ரூபாய், கோயம்புத்தூர் - 55,700 ரூபாய், மதுரை - 55,700 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,760 ரூபாய், மும்பை - 60,440 ரூபாய், டெல்லி - 60,590 ரூபாய், கொல்கத்தா - 60,440 ரூபாய், பெங்களூர் - 60,440 ரூபாய், ஹைதராபாத் - 60,440 ரூபாய், கேரளா - 60,440 ரூபாய், புனே - 60,440 ரூபாய், பரோடா - 60,490 ரூபாய், அகமதாபாத் - 60,490 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,590 ரூபாய், லக்னோ - 60,590 ரூபாய், கோயம்புத்தூர் - 60,760 ரூபாய், மதுரை - 60,760 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82000 ரூபாய், மும்பை - 79000 ரூபாய், டெல்லி - 79000 ரூபாய், கொல்கத்தா - 79000 ரூபாய், பெங்களூர் - 77000 ரூபாய், ஹைதராபாத் - 82000 ரூபாய், கேரளா - 82000 ரூபாய், புனே - 79000 ரூபாய், பரோடா - 79000 ரூபாய், அகமதாபாத் - 79000 ரூபாய், ஜெய்ப்பூர் - 78000 ரூபாய், லக்னோ - 79900 ரூபாய், கோயம்புத்தூர் - 82000 ரூபாய், மதுரை - 82000 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 82000 ரூபாய், மும்பை - 79000 ரூபாய், டெல்லி - 79000 ரூபாய், கொல்கத்தா - 79000 ரூபாய், பெங்களூர் - 77000 ரூபாய், ஹைதராபாத் - 82000 ரூபாய், கேரளா - 82000 ரூபாய், புனே - 79000 ரூபாய், பரோடா - 79000 ரூபாய், அகமதாபாத் - 79000 ரூபாய், ஜெய்ப்பூர் - 78000 ரூபாய், லக்னோ - 79900 ரூபாய், கோயம்புத்தூர் - 82000 ரூபாய், மதுரை - 82000 ரூபாய்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications