தங்கம் விலை கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது, இந்த நீண்ட நெடிய சரிவில் முதல் 4 நாட்கள் சர்வதேச சந்தை காரணமாக இருந்தது, அடுத்த 4 நாள் மத்திய அரசின் அறிவிப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பால் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நாட்டின் ஒவ்வொரு நகைக் கடையும் திருவிழா போல காட்சி அளிக்கிறது.
இதற்கு ஏற்றார் போல் அடுத்த சில மாதத்தில் திருமண சீசன் துவங்க உள்ளது, பண்டிகை காலம் துவங்க உள்ளது, இதனால் விலை சரிவைப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் அதிக எடை கொண்ட தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால் பங்குச்சந்தையில் நகைக் கடை பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் குறிப்பிட்டு உள்ளது போல் அமெரிக்கப் பொருளாதார தரவுகள் தங்கம் விலையை மாற்றக்கூடிய திறன் கொண்டதாக அறிவித்தோம். இதற்கு ஏற்றார் போல் அமெரிக்கப் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 2.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது மார்ச் காலாண்டின் 1.4 சதவீத வளர்ச்சியை ஒப்பிடும் போது பெரும் வளர்ச்சியாகும்.
இதேபோல் அமெரிக்காவின் நுகர்வோர் செலவின குறியீடான PCE Price Index 3.7 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வலிமையான தரவுகள் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான முதலீடுகள் தேவைப்படவில்லை என்பதைக் குறிக்கிறது,எனவே தங்கம் மீதான டிமாண்ட் குறைந்துகொண்டே வந்து இன்று சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை மந்த நிலைக்குச் சென்றுள்ளது.
இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சரிவு குறைந்துகொண்டே வருகிறது, கடந்த 2 நாட்களாக கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து வந்த நிலையில் இன்று 15 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. இதேவேளையில் இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்த தங்கம் விலை சரிவு இந்த வாரத்துடன் முடிவடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தங்கம் வாங்க திட்டமிடுவோர் இக்காலகட்டத்தைப் பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கிட்டத்தட்ட நேற்றைய விலை அளவான 2374 டாலரில் உள்ளது, ஆனால் அமெரிக்க சந்தை வர்த்தக நேரத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சனிக்கிழமையும் இந்திய ரீடைல் சந்தையில் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 64,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 69,980 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 51,320 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லைமல் நேற்றைய விலையான 89,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 50 ரூபாய் மட்டும் குறைந்து 25,240 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,415 ரூபாய், மும்பை - 6,400 ரூபாய், டெல்லி - 6,415 ரூபாய், கொல்கத்தா - 6,400 ரூபாய், பெங்களூர் - 6,400 ரூபாய், ஹைதராபாத் - 6,400 ரூபாய், கேரளா - 6,400 ரூபாய், புனே - 6,400 ரூபாய், பரோடா - 6,405 ரூபாய், அகமதாபாத் - 6,405 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,415 ரூபாய், லக்னோ - 6,415 ரூபாய், கோயம்புத்தூர் - 6,415 ரூபாய், மதுரை - 6,415 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,998 ரூபாய், மும்பை - 6,982 ரூபாய், டெல்லி - 6,995 ரூபாய், கொல்கத்தா - 6,982 ரூபாய், பெங்களூர் - 6,982 ரூபாய், ஹைதராபாத் - 6,982 ரூபாய், கேரளா - 6,982 ரூபாய், புனே - 6,982 ரூபாய், பரோடா - 6,985 ரூபாய், அகமதாபாத் - 6,985 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,995 ரூபாய், லக்னோ - 6,995 ரூபாய், கோயம்புத்தூர் - 6,998 ரூபாய், மதுரை - 6,998 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51320 ரூபாய், மும்பை - 51200 ரூபாய், டெல்லி - 51320 ரூபாய், கொல்கத்தா - 51200 ரூபாய், பெங்களூர் - 51200 ரூபாய், ஹைதராபாத் - 51200 ரூபாய், கேரளா - 51200 ரூபாய், புனே - 51200 ரூபாய், பரோடா - 51240 ரூபாய், அகமதாபாத் - 51240 ரூபாய், ஜெய்ப்பூர் - 51320 ரூபாய், லக்னோ - 51320 ரூபாய், கோயம்புத்தூர் - 51320 ரூபாய், மதுரை - 51320 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,240 ரூபாய், மும்பை - 25,240 ரூபாய், டெல்லி - 25,240 ரூபாய், கொல்கத்தா - 25,240 ரூபாய், பெங்களூர் - 25,240 ரூபாய், ஹைதராபாத் - 25,240 ரூபாய், கேரளா - 25,240 ரூபாய், அகமதாபாத் - 25,240 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,240 ரூபாய், லக்னோ - 25,240 ரூபாய், கோயம்புத்தூர் - 25,240 ரூபாய், மதுரை - 25,240 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89,000 ரூபாய், மும்பை - 84,500 ரூபாய், டெல்லி - 84,500 ரூபாய், கொல்கத்தா - 84,500 ரூபாய், பெங்களூர் - 84,250 ரூபாய், ஹைதராபாத் - 89,000 ரூபாய், கேரளா - 89,000 ரூபாய், புனே - 84,500 ரூபாய், பரோடா - 84,500 ரூபாய், அகமதாபாத் - 84,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 84,500 ரூபாய், லக்னோ - 84,500 ரூபாய், கோயம்புத்தூர் - 89,000 ரூபாய், மதுரை - 89,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,107 ரூபாய்
குவைத் - KWD 21 - 5,874 ரூபாய்
மலேசியா - MYR 354 - 6,358 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,230 ரூபாய்
கத்தார் - QAR 270 - 6,199 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 272 - 6,070 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,204 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 266 - 6,058 ரூபாய்
அமெரிக்கா - USD 72 - 6,070 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 266 - 6,058 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 266 - 6,058 ரூபாய்
துபாய் (UAE) - AED 266 - 6,058 ரூபாய்
புஜைரா (UAE) - AED 266 - 6,058 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 266 - 6,058 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 266 - 6,058 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 270 - 6,199 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,230 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 272 - 6,070 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,485 ரூபாய்
குவைத் - KWD 23 - 6,432 ரூபாய்
மலேசியா - MYR 366 - 6,574 ரூபாய்
ஓமன் - OMR 30 - 6,567 ரூபாய்
கத்தார் - QAR 288 - 6,612 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 293 - 6,539 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110 - 6,846 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 287 - 6,542 ரூபாய்
அமெரிக்கா - USD 76 - 6,404 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 287 - 6,542 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 287 - 6,542 ரூபாய்
துபாய் (UAE) - AED 287 - 6,542 ரூபாய்
புஜைரா (UAE) - AED 287 - 6,542 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 287 - 6,542 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 287 - 6,542 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 288 - 6,612 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,567 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 293 - 6,539 ரூபாய்
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கத்தை ஓரம் கட்டும் வெள்ளி! உலக நாடுகளின் பார்வை இப்போது இந்தியா பக்கம்..ஏன் இந்த மாற்றம்?



Click it and Unblock the Notifications