மூன்றாவது நாளாக தொடர் சரிவில் தங்கம் விலை! மேலும் விலை சரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் திருமண சீசன் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்க இருக்கிறது. அதே போல தசரா, தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகைகளும் வர இருக்கின்றன.

இந்த பண்டிகை கால கட்டங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என தங்க நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் தங்கம் விலை சரசரவென சரிந்து கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை நிலவரம் என்ன? எத்தனை நாட்களாக தங்கம் விலை சரிகிறது? எவ்வளவு தங்கம் விலை சரிந்து இருக்கிறது? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

மைலாபூரில் கபாலீஸ்வரர் வீற்று இருக்கும் நம் சிங்காரச் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 52,770 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய விலையை விட 320 ரூபாய் சரிவு. அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,380 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய விற்பனை விலையை விட 270 ரூபாய் சரிவு.

எம் சி எக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம் சி எக்ஸ் தங்கம் விலை நிலவரம்

இந்தியாவின் எம் சி எக்ஸ் கமாடிட்டி சந்தையில், டிசம்பர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,245 ரூபாயை விட 51 ரூபாய் (0.10 %) விலை ஏற்றம் கண்டு 50,296 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

862 ரூபாய் டவுன்
 

862 ரூபாய் டவுன்

உண்மையில் இந்த 51 ரூபாய் விலை ஏற்றத்தை ஒரு ஏற்ற டிரெண்டாகப் பார்க்க முடியாது. இன்னும் சிறிது நேரம் போனால், இந்த 51 ரூபாய் விலை ஏற்றம் கூட காணாமல் போகலாம். நேற்று ஒரே நாளில் எம் சி எக்ஸ் தங்கம் விலை 862 ரூபாய் விலை சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தட தட சரிவில் சர்வதேச தங்கம் விலை

தட தட சரிவில் சர்வதேச தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை நேற்று (13 அக்டோபர் 2020, செவ்வாய்க் கிழமை) 1,891 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் தரவுகள். இன்று 9 டாலர் (0.47 %) விலை சரிந்து1,882 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

$1,930-ல் இருந்து $1,882

$1,930-ல் இருந்து $1,882

கடந்த 21 செப்டம்பர் 2020-க்குப் பிறகு, 09 அக்டோபர் 2020 அன்று தான் சர்வதேச தங்கம் விலை 1,930 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. அதன் பிறகு 1,930 டாலர் லெவல்களை சர்வதேச தங்கத்தால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்று 1,882 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

மூன்று நாட்களில் 2.48 % விலை வீழ்ச்சி

மூன்று நாட்களில் 2.48 % விலை வீழ்ச்சி

சர்வதேச தங்கம் (XAU USD) விலை, கடந்த 3 வர்த்தக நாட்களில் (அக் 12, அக் 13, அக் 14) 48 டாலர் (2.48 %) விலை சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பொதுவாக, சர்வதேச தங்கம் விலை வீழ்ச்சி கண்டால், எம் சி எக்ஸ் தங்கம் தொடங்கி ஆபரணத் தங்கம் வரை எல்லாவற்றின் விலையும் வீழ்ச்சி காணும். எனவே மற்ற தங்கம் விலைகளும் வீழ்ச்சி காண நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ரூபாய் கரன்சி VS டாலர் கரன்சி

ரூபாய் கரன்சி VS டாலர் கரன்சி

இந்தியாவின் எம் சி எக்ஸ் தங்கம் மற்றும் சென்னை ஆபரணத் தங்கம் விலை, சர்வதேச தங்கம் விலை மட்டும் இன்றி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாறுவதைப் பொருத்தும் விலை மாறுபடும். 9 அக் 2020-ல் இருந்து இன்று வரை சர்வதேச தங்கம் விலை சரிகிறது என்றால், அதே 9 அக் 2020 முதல் இன்று வரை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து இருக்கிறது. அதாவது இந்திஅய் ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து இருக்கிறது. எனவே பெரிய அளவில், எம் சி எக்ஸ் & ஆபரணத் தங்கம் விலை மாற்றம் காணவில்லை.

லாபத்தை வெளியே எடுப்பது

லாபத்தை வெளியே எடுப்பது

சர்வதேச தங்கம் விலை, கடந்த சில வாரங்களாக விலை ஏற்றம் கண்டு வந்ததைப் பார்த்தோம். சர்வதேச தங்கத்தில் முதலீடு செய்து இருந்தவர்கள், விலை ஏற்றம் மூலம் வந்த லாபத்தை வெளியே எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். சுருக்கமாக Profit Booking செய்து இருக்கிறார்கள். எனவே தான் சர்வதேச தங்கம் விலை சரிவதாகச் சொல்கிறது FX Street வலைதளச் செய்திகள்.

$1,825 வரைத் தொடலாம்

$1,825 வரைத் தொடலாம்

FX Street வலைதளத்தின் கணிப்புகள் படி, சர்வதேச தங்கம் விலை மேற்கொண்டு 1,834 டாலர் முதல் 1,825 டாலர் வரை சரியலாம் எனச் சொல்கிறது. சர்வதேச தங்கம் விலை, 1,726 டாலர் வரைத் தொடலாம் என க்ரெடிட் சூசி நிறுவனம் கணித்து இருந்தது இங்கு மீண்டும் நினைவு கூறத்தக்கது.

நான்சி பெலோசி நிராகரிப்பு

நான்சி பெலோசி நிராகரிப்பு

அமெரிக்க அரசு, 1.8 ட்ரில்லியன் டாலர் ஸ்டிமுலஸ் பேக்கேஜை, அவைத் தலைவர் நான்சி பெலோசிக்கு அனுப்பியது. "கொரோனா வைரஸ் மற்றும் கடுமையான ரெசனுக்குக்கு தேவையானதை விட, இந்த 1.8 ட்ரில்லியன் டாலர் குறைவாக இருக்கிறது" எனச் சொல்லி நிராகரித்து இருக்கிறார் நான்சி பெலோசி. எனவே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் வருவது சந்தேகம் தான் என்கிறது லைவ் மிண்ட் பத்திரிகை.

கொரோனா வேசின் சோதனை நிறுத்தம்

கொரோனா வேசின் சோதனை நிறுத்தம்

ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) மற்றும் எலி லில்லி & கோ (Eli Lilly & co) நிறுவனங்களின், கொரோனா வைராஸுக்கான மாற்று மருந்து சோதனைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. அதோடு உலக அளவில் எல்லா நாட்டுப் பங்குச் சந்தைகளும் நேற்று தடுமாறி இருக்கின்றன. இதுவும் தங்கம் விலை பெரிய சரிவைக் காணாமல் இருக்க முக்கிய காரணம் என்கிறது லைவ் மிண்ட்.

வலு பெற்ற அமெரிக்க டாலர் கரன்சி

வலு பெற்ற அமெரிக்க டாலர் கரன்சி

யூரோ, யென், உட்பட, உலகின் ஆறு முக்கிய கரன்சிக்கு எதிராக, அமெரிக்க டாலர் கரன்சியின் வலிமை எப்படி இருக்கிறது எனச் சொல்லும் டாலர் இண்டெக்ஸ், மீண்டும் ஏற்றப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. கடந்த 9 அக்டோபர் 2020 அன்று 93.05 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்தது. நேற்று (13 அக்டோபர் 2020) 93.53 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று 93.56 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

Millwood Kane International கணிப்பு

Millwood Kane International கணிப்பு

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு. இது பணவீக்கத்தை சரிகட்டும் ஒரு முதலீடு. உலக பொருளாதாரம் மீள்வதில் ஒரு தெளிவு கிடைக்கும் வரை முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். எதிர்காலத்தில், அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள், அதனால், அமெரிக்க டாலரில் ஏற்படும் தாக்கம், கொரோனா வேசின் பொன்றவைகள் தான் தங்கத்தின் திசையை தீர்மானிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் Millwood Kane International அமைப்பின் நிறுவனர் நிஷ் பட் (Nish Bhatt).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price falling for third day consecutively it may fall further

The gold price has been falling for the third day consecutively. The gold price may fall further as per FX Street prediction.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X