தங்கம் நேற்றைய விலை உயர்வை மொத்தமாகக் குறைத்துள்ளது இன்று பழைய நிலைக்கே திரும்பியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்பு தங்கம் விலை தடாலடியாக உயர்ந்த நிலையில் தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரனுக்கு 800 ரூபாய் என பெரும் உயர்வைக் கண்டது, ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் சரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த விலை சரிவுக்கு முதலும் முக்கியமான காரணம் அமெரிக்கச் சந்தை நிலவரம் தான். அமெரிக்காவில் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சிக் குறியீடான S&P PMI குறியீடு வெளியான பிறகு, தங்கம் மீதான முதலீடுகள் அதிகளவில் வெளியேறியது.
S&P Global வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்காவில் மே மாத தொழில்துறை PMI குறியீடு 51.3 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதம் 51.7 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சேவைத் துறை PMI குறியீடு 48.3 இல் இருந்து 55.1 ஆக அதிகரித்துள்ளது. இந்த இரு துறைகளிலும் வளர்ச்சி தொடர்ந்து சீராக இருப்பதைக் காட்டுகிறது.
PMI குறியீட்டின் வளர்ச்சி பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பைக் குறிக்கிறது, சந்தையில் போதுமான டிமாண்ட் மற்றும் சப்ளை இருக்கும் போது தான் PMI குறியீடு வளர்ச்சி அடையும். இந்த PMI குறியீடு குறைந்தால் அரசு தரப்பில் இருந்து உந்து சக்தி தேவை என்பது பொருள்.
இதன் விளைவாக, PMI குறியீடு அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்களின் நிதி நிலை சிறப்பாக இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve (Fed) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். தற்போதைய சூழ்நிலையில் வட்டி விகிதத்தைக் குறைத்தால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.
பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பு தாமதமாகும் பட்சத்தில், தங்கத்தின் மீதான தேவை குறைந்து, விலை சரிவு ஏற்படும். மொத்த முதலீடும் பங்குச்சந்தைக்கும், பத்திர சந்தை பக்கம் திரும்பியுள்ளது. இதேபோல் அமெரிக்க அரசு புதிய பத்திர வெளியிட உள்ளதால் கூடுதல் முதலீடுகள் பத்திர சந்தை பக்கம் திரும்ப உள்ளது. இதனாலேயே தங்கம் விலை நேற்றைய அமெரிக்க வர்த்தக சந்தையில் குறைந்துள்ளது, தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து குறைய வாய்ப்புகள் உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 850 ரூபாய் குறைந்து 66,950 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 930 ரூபாய் குறைந்து 73,040 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 680 ரூபாய் குறைந்து 53,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்து 96500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 310 ரூபாய் உயர்ந்து 26,620 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,695 ரூபாய், மும்பை - 6,635 ரூபாய், டெல்லி - 6,650 ரூபாய், கொல்கத்தா - 6,635 ரூபாய், பெங்களூர் - 6,635 ரூபாய், ஹைதராபாத் - 6,635 ரூபாய், கேரளா - 6,635 ரூபாய், புனே - 6,635 ரூபாய், பரோடா - 6,640 ரூபாய், அகமதாபாத் - 6,640 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,650 ரூபாய், லக்னோ - 6,650 ரூபாய், கோயம்புத்தூர் - 6,695 ரூபாய், மதுரை - 6,695 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,304 ரூபாய், மும்பை - 7,238 ரூபாய், டெல்லி - 7,253 ரூபாய், கொல்கத்தா - 7,238 ரூபாய், பெங்களூர் - 7,238 ரூபாய், ஹைதராபாத் - 7,238 ரூபாய், கேரளா - 7,238 ரூபாய், புனே - 7,238 ரூபாய், பரோடா - 7,243 ரூபாய், அகமதாபாத் - 7,243 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,253 ரூபாய், லக்னோ - 7,253 ரூபாய், கோயம்புத்தூர் - 7,304 ரூபாய், மதுரை - 7,304 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53560 ரூபாய், மும்பை - 53080 ரூபாய், டெல்லி - 53200 ரூபாய், கொல்கத்தா - 53080 ரூபாய், பெங்களூர் - 53080 ரூபாய், ஹைதராபாத் - 53080 ரூபாய், கேரளா - 53080 ரூபாய், புனே - 53080 ரூபாய், பரோடா - 53120 ரூபாய், அகமதாபாத் - 53120 ரூபாய், ஜெய்ப்பூர் - 53200 ரூபாய், லக்னோ - 53200 ரூபாய், கோயம்புத்தூர் - 53560 ரூபாய், மதுரை - 53560 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,620 ரூபாய், மும்பை - 26,620 ரூபாய், டெல்லி - 26,620 ரூபாய், கொல்கத்தா - 26,620 ரூபாய், பெங்களூர் - 26,620 ரூபாய், ஹைதராபாத் - 26,620 ரூபாய், கேரளா - 26,620 ரூபாய், அகமதாபாத் - 26,620 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,620 ரூபாய், லக்னோ - 26,620 ரூபாய், கோயம்புத்தூர் - 26,620 ரூபாய், மதுரை - 26,620 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 96500 ரூபாய், மும்பை - 92000 ரூபாய், டெல்லி - 92000 ரூபாய், கொல்கத்தா - 92000 ரூபாய், பெங்களூர் - 92950 ரூபாய், ஹைதராபாத் - 96500 ரூபாய், கேரளா - 96500 ரூபாய், புனே - 92000 ரூபாய், பரோடா - 92000 ரூபாய், அகமதாபாத் - 92000 ரூபாய், ஜெய்ப்பூர் - 92000 ரூபாய், லக்னோ - 92000 ரூபாய், கோயம்புத்தூர் - 96500 ரூபாய், மதுரை - 96500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.20 - 6,030 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,992 ரூபாய்,
மலேசியா - MYR 347 - 6,154 ரூபாய்,
ஓமன் - OMR 27.75 - 6,024 ரூபாய்,
கத்தார் - QAR 266 - 6,098 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 267 - 5,948 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.50 - 6,076 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 260.25 - 5,921 ரூபாய்,
அமெரிக்கா - USD 71.50 - 5,975 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
துபாய் (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 266 - 6,098 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.75 - 6,024 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 267 - 5,948 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.80 - 6,385 ரூபாய்,
குவைத் - KWD 23.35 - 6,359 ரூபாய்,
மலேசியா - MYR 361 - 6,402 ரூபாய்,
ஓமன் - OMR 29.55 - 6,414 ரூபாய்,
கத்தார் - QAR 283.50 - 6,499 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 288 - 6,416 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.40 - 6,687 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281 - 6,393 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,309 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
துபாய் (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 283.50 - 6,499 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.55 - 6,414 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,416 ரூபாய்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |



Click it and Unblock the Notifications