Gold Rate: மாசக்கடையில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! ஒரே வாரத்தில் நிகழ்ந்த மாற்றம்..!!

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் விலை ஏற்றத்துடன் இருந்த தங்கம் கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் விலை குறைந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,370 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,080 ரூபாய் விலை சரிந்து 1,14,960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: மாசக்கடையில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! ஒரே வாரத்தில் நிகழ்ந்த மாற்றம்..!!

ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,256 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரன் தங்கம் 1,06,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்தில் தங்கம் விலை கிராமுக்கு 1114 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு தங்கம் விலை 8,912 ரூபாய் விலை கூடியுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இந்த மாதம் தங்கம் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 15,677 ரூபாய்க்கும் 10 கிராம் 1,56,770 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,140 ரூபாய்க்கும் ஒரு சவரன் 97,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை.அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.60 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.35 லட்சத்திற்கும் விற்பனையானது. இந்த மாதத்தில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

உலக சந்தையில் நிகழும் மாற்றங்கள் தான் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த மாதத்தில் முதல் 3 வாரங்களில் தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து கடந்த வாரத்தில் தான் குறைந்தது. இதனால் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்தது. செப்டம்பரில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் செயல்பாடுகள், ஈரான் அமெரிக்கா போர் ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தான் தங்கம் , வெள்ளி விலைகள் மாறும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+