உலகின் முக்கிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கள் பாதுகாப்பான முதலீடுகளை, குறிப்பாக தங்கத்தில், சிறிது குறைத்துள்ளனர். இந்த காரணமாக, தங்கத்தின் விலை 2% வரை குறைந்துள்ளது. திங்கட்கிழமை இன்று அதிகாலையில் ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் ஸ்பாட் விலை உடனடி கொள்முதல் விலை 2.3% குறைந்தது. பின்னர், சிங்கப்பூரில் காலை 6:57 மணிக்கு அவுன்ஸ் ஒன்றுக்கு 3,277.2 டாலராக பதிவாகியது.
இந்த விலை குறைவு, கடந்த வாரம் பதிவான 2.6% லாபத்திற்கு பிறகு ஏற்பட்டது. அதாவது, கடந்த வாரம் தங்கம் விலை ஏறிய நிலையில் இருந்தாலும், தற்போது வர்த்தக பேச்சுவார்த்தைகளால் சந்தையில் நம்பிக்கை வந்ததால் விலை குறைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்குக இடையே சுவிட்சர்லாந்தில் நடந்த முக்கிய சந்திப்பின் போது, இருநாடுகளும் வர்த்தக போரை முடிக்க முயற்சி செய்து வருகின்றன என்று தெரிவித்தன. ஆனால், இது தொடர்பான எந்த தீர்மானமோ, உடன்பாடோ உடனடியாக வெளியிடப் படவில்லை. இதனால்தான் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை 3,500 டாலரை நோக்கி அதிகரித்த வேகம் இப்போது குறைந்து வருகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்தில் உக்ரைன் விவகாரம்: தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் கவனம் தற்போது உக்ரைன் நிலைமையின் மீதும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். அதே சமயம், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky, ரஷ்ய அதிபர் Vladimir Putin ஐ பேச அழைத்துள்ளார். இது பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கலாம் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறான பேச்சுவார்த்தை முயற்சிகள் உலகில் இருக்கும் அரசியல் பதட்டங்களை குறைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் மீது கொண்டிருந்த அவசரம் குறைந்துள்ளது.
தங்கம் தவிர மற்ற உலோகங்கள் - கலந்த எதிர்வினை: இதற்கு இடையில், பிற விலைமதிப்பற்ற உலோகங்களான வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் ஆகியவைகள் கலந்த பலன்களை காட்டின. வெள்ளியின் விலை குறைந்தது. ஆனால், பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் லாபம் கொடுத்தது. தங்கத்தின் விலை குறைந்தாலும், அதை ஆதரிக்கும் காரணங்கள் இன்னும் இருக்கின்றன. பல மத்திய வங்கிகள் தங்கத்தை குவிக்க தொடர்ந்து விரும்புகின்றன. சீனாவில் தங்க நகை வாங்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், தங்கம் முழுமையாக வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம்
அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தைகள் மற்றும் உக்ரைன் சமாதான முயற்சிகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தருவதால், தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இருப்பினும், தங்கத்தை ஆதரிக்கும் பல காரணங்கள் இருப்பதால், இது நிலையான விலை வீழ்ச்சி எனக் கூற முடியாது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications