உங்க கையில் ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்க முடியும் தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்துள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் வாங்க சென்றால் 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு தங்கம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் நேற்று 13,215 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 60 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் 13,155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 480 ரூபாய் விலை சரிந்து 1,05,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை மட்டுமல்ல மதுரை, கோவை, திருச்சி என பிரதான நகரங்களில் எல்லாம் ஆபரணத்தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.

உங்க கையில் ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்க முடியும் தெரியுமா?

இன்றைய விலைக்கு நீங்கள் 1 லட்சம் ரூபாய் இருந்தால் 22 கேரட் ஆபரண தங்கம் 12% செய்கூலி சேதாரம் மற்றும் 3% ஜிஎஸ்டி சேர்த்து 6.58 கிராம் அளவிலான தங்கம் வாங்க முடியும். இந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதும் ஆகவே காணப்படுகிறது. நேற்று, இன்று என இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 215 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1720 ரூபாயும் குறைந்துள்ளது.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,351 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 10 கிராம் 1,43,510 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 10,970 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் விலை குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராம் 1,41,285 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை 2.17 லட்சமாக உள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை காலை 4,028 டாலராக குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை குறைந்ததே இந்தியாவிலும் தங்கம் விலை குறைய காரணம்.

அமெரிக்க மத்திய வங்கியின் ஃபெடரல் ரிசர்வ் கூட்டம் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கெவின் வார்ஷ் தலைமையிலான குழு வட்டி உயர்வு அறிவிப்பை வெளியிடுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வேளை வட்டி உயர்த்தப்பட்டாலோ அல்லது வட்டி அதே அளவில் நீடித்தாலோ தங்கம் விலை இன்னும் குறையும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+