கிட்டதட்ட ஓராண்டுக்கு பின் தங்கம் விலை சவரன் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சென்று மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. தங்க நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு இன்று மிகச்சிறந்த நாளாக அமைந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 70 ரூபாய் குறைந்து 12,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 560 ரூபாய் விலை சரிந்து 99,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் கிட்டதட்ட ஓராண்டுக்கு பிறகு 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சென்றுள்ளது. அதாவது கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு தங்கம் விலை இவ்வளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 6 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 6 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 785 ரூபாயும் ஒரு சவரனுக்கு 6,280 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 7,850 ரூபாய் விலை குறைந்துள்ளது. வீட்டில் திருமணம் போன்ற நிகழ்வுகள்க்கு தங்கம் நகை வாங்க வேண்டியவர்கள் இன்று கடைக்கு சென்றால் நல்ல விலைக்கு தங்கம் வாங்கலாம்.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,604 ரூபாய்க்கும் 10 கிராம் 1,36,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,205 ரூபாய்க்கும் ஒரு சவரன் 81,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1.90 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 235 ரூபாயும் கிலோவுக்கு 2.35 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் என நினைத்து முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீடுகளை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் சரிவை சந்திக்கிறது. இது தான் தமிழ்நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை சரிய காரணம்.
உலக சந்தையில் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,870 டாலர்களாக இருக்கிறது ஒரு அவுன்ஸ் வெள்ளி 47 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.34 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. இனி வரும் நாட்களூம் தங்கம் விலை சரிவிலேயே இருக்கும் என்றும் சில மாதங்களுக்கு பின் ஏற்றம் காணும் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அடுத்த ஓராண்டுக்கு பெரிய விலை ஏற்றம் இருக்காது என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

