தங்கத்தையும், இந்திய மக்களை எப்போதும் பிரிக்க முடியாது, தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்களை இதை வாங்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து தேடுவார்கள். அப்படியொரு வாய்ப்பு தான் தற்போது உருவாகியுள்ளது, ஆமாம் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை 2வது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்துள்ளது.
ஒருபக்கம் ரஷ்ய உக்ரைன் போரில் தற்காலிக தாக்கல் நிறுத்தம் தங்கம் விலை குறைப்பிற்கு வழிவகுத்தாலும், அமெரிக்கா - ஹவுதி மத்தியில் புதிதாகத் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் அமெரிக்கா - ஐரோப்பா மத்தியில் வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது, ஏப்ரல் மாதத்தில் இருந்து அமெரிக்கா உலகின் பெரும்பாலான நாடுகள் மீது வரியை விதிக்க உள்ளது.

தற்போது அனைத்து அமெரிக்க முதலீடுகளும் பத்திர சந்தைக்குத் திரும்பி வரும் வேளையில் ஏப்ரல் மாதம் முதல் என்ன நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட விலை சரிவு தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை,திங்கள்கிழமை ஆசியச் சந்தை தொடங்கிய சில மணி நேரங்களில் 3,005 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டு, பின்னர் சற்று குறைந்து 2,985 டாலர் அளவில் வலுவான நிலையில் உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், சர்வதேச வர்த்தகப் போரால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையுமே தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம் இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது. இன்று தமிழ்நாடு ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் குறைந்து 89560 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 82100 ரூபாயும், ஒரு சவரன் தங்கம் விலை 65,680 ரூபாயாகவும் உள்ளது.
அமெரிக்காவின் பிப்ரவரி மாத சில்லறை விற்பனை தரவுகள் வெளியாகும் வரையில் தங்கம் விலை சற்று மந்தமாகவே செயல்படும், இதோடு இந்த வாரம் நடக்க இருக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை முடிவும் தங்கம் விலையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
அமெரிக்காவுக்கும் அதன் முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச நிதிச் சந்தைகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள் மீது 200% வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் விஸ்கி மற்றும் பிற பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, அமெரிக்க அரசு, ஐரோப்பிய நாட்டில் இருந்து வரும் ஸ்டீல் மற்றும் அலுமினிய மீது 25% இறக்குமதி வரி விதித்தது, அதற்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்க திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வர்த்தகப் போரால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான முதலீட்டுத் தேவையால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சர்வதேச வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்தால், தங்கத்தின் விலை இன்னும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு தற்காலிகமானது, இதேபோல் மார்ச் 18-19 ஆம் தேதி நடக்கும் பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவு தங்கம் விலையைக் குறைக்குமா உயர்த்துமா என்பது தீர்மானிக்கப்படும். மேலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து பத்திர சந்தையில் முதலீடுகள் அதிகரித்தால் தங்கம் விலை கூடுதலாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!



Click it and Unblock the Notifications