Gold Rate: 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம் விலை..!! ஒரே வாரத்தில் ரூ.6000க்கு மேல் விலை சரிவு..!!

தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து சாமானிய மக்களுக்கு சர்ப்பிரைஸ் தந்துள்ளது. இந்த மாதத்திலேயே தங்கம் இன்று தான் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி மாத விலைக்கே திரும்பி இருக்கிறது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 12,615 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 640 ரூபாய் விலை சரிந்து 1,00,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Gold Rate: 10 மாதங்கள் பின்னோக்கி சென்ற தங்கம் விலை..!! ஒரே வாரத்தில் ரூ.6000க்கு மேல் விலை சரிவு..!

இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி தான் ஆபரண தங்கம் விலை கிராம் 12,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பின் தங்கம் விலை 12,600 ரூபாய் என்ற விலைக்கே திரும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 640 ரூபாயும் ஒரு சவரனுக்கு 5,120 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 6,400 ரூபாய் விலை குறைந்துள்ளது. இந்த வாரத்தில் திங்கள் கிழமை தவிர்த்து மற்ற 5 நாட்களுமே தங்கம் விலை சரிவில் தான் இருந்துள்ளது. இன்னும் 1000 ரூபாய் சரிந்தால் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லும்.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,762 ரூபாய்க்கும் 10 கிராம் 1,37,620 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,330 ரூபாய்க்கும் ஒரு சவரன் 82,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 195 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1.95 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை இந்த வாரத்தில் மட்டும் கிராமுக்கு 10 ரூபாயும், கிலோவுக்கு 10,000 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

Recommended For You

உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது கொண்டே வருகிறது. இதனால் தான் தமிழ்நாட்டிலும் தங்கம் விலை குறைகிறது. அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டை குறைத்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,878 டாலர்களாக இருக்கிறது ஒரு அவுன்ஸ் வெள்ளி 48 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. இனி வரும் நாட்கள் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர், டிசம்பர் மாதத்திற்கு பின் டிரெண்ட் மாற வாய்ப்புள்ளது என்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+