தங்கம் விலை: போன வாரம் நடந்தது அப்படியே ரிப்பீட்டு..!! அப்போ நாளைக்கு தங்கம் விலை என்ன ஆகும்?

தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆபரண தங்கம் மற்றும் 24 கேரட் சுத்த தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 85 ரூபாய் விலை சரிந்து 14,185 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 680 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை: போன வாரம் நடந்தது அப்படியே ரிப்பீட்டு..!! அப்போ நாளைக்கு தங்கம் விலை என்ன ஆகும்?

கடந்த வாரத்தில் திங்கள் , செவ்வாய் என தொடர்ந்து முதல் இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்தது. அதே டிரெண்ட் தான் இந்த வாரமும் காணப்படுகிறது. திங்கள்கிழமையான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்தது, இன்று கிராமுக்கு 85 ரூபாய் சரிந்துள்ளது. கடந்த வாரமும் இதே போல தான் விலை சரிவு காணப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக தான் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கடந்த வாரம் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் விலை குறைந்த தங்கம் , புதன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் விலை உயர்ந்தது.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 93 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,475 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,955 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. கடந்த 18ஆம் தேதிக்கு பின் வெள்ளி விலை ஒரு கிராம் 255 ரூபாய் என்ற விலைக்கு சரிந்துள்ளது.

Recommended For You

கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, மீண்டும் ஒரு முறை வட்டி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலர் வலுவடைந்து வருகிறது. எனவே உலக சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து தங்கம் விலையும் குறைந்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+