தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்கிறதா? 3 நாட்களில் ரூ.3500க்கும் மேல் விலை சரிவு..!!

தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக விலை சரிந்துள்ளது. இதனால் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்திற்கும் கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 12,815 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,600 ரூபாய் விலை சரிந்து 1,02,520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்கிறதா? 3 நாட்களில் ரூ.3500க்கும் மேல் விலை சரிவு..!!

தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை குறைந்திருப்பதால் ஒரு சவரன் தங்கம் விலை 1லட்சம் ரூபாய்க்கு கீழ் குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் 2,600 ரூபாய் விலை குறைந்தால் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சென்றுவிடும். தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 440 ரூபாயும் ஒரு சவரனுக்கு 3,520 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 4,440 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதுவே அடுத்த சில நாட்கள் நீடித்தால் போதும்.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,980 ரூபாய்க்கும் 10 கிராம் 1,39,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,485 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read

வெள்ளியின் விலை இன்று மாற்றமடையவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாய் சரிவில் தான் இருக்கிறது.

Recommended For You

உலக சந்தையில் தங்கம் விலை குறைந்தது தான் இந்தியாவிலும் தங்கம் விலை சரிய காரணம். அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,975 டாலர்களாக இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.38 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை மேலும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+