இந்தியாவில் செயல்படுத்தப்படும் பொருளாதார ஊக்கத் திட்டங்கள், தடுப்பு மருந்து மீதான நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இனியும் பாதுகாப்பான முதலீடு என்ற ஒன்று தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் தங்கம் விலை இந்தியாவில் தொடர்ந்து சரிந்து வருகிறது.
முதலீட்டுச் சந்தையில் மாற்றம்
இதேபோல் உலக நாடுகளிலும் பங்குச்சந்தை, பத்திர சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து வெளியேறி வருகிறது.
இதன் வாயிலாகவே 5 ரூபாய், 10 ரூபாய் எனக் குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு 89 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலையில் பெரும் சரிவு
இன்றைய வர்த்தக்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 97 ரூபாய் சரிந்து 4,654 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை 89 ரூபாய் சரிந்து 4,266 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
நகைக் கடைகளில் மக்கள் கூட்டம்
இந்த அதிகப்படியான சரிவின் காரணமாகத் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 2020 முழுவதும் தங்கம் விலை பார்க்கும் போதே பயந்து ஓடிய மக்களுக்கு இந்த விலை சரிவு ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும்.
11,000 ரூபாய் சரிவு
மேலும் தங்கம் தனது உச்ச விலையிலிருந்து சுமார் 11,000 ரூபாய் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதால் முதலீட்டுச் சந்தையில் ஆதிக்கத்தை இழந்த தங்கம் ரீடைல் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
கோவை, சேலம், மதுரை
இதன் மூலம் சென்னை, கோவை, சேலம், மதுரை ஆகிய நகரங்களில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை இன்று 712 ரூபாய் குறைந்து 34,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 1,300 ரூபாய் குறைந்து 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
இதேபோல் தங்கத்தை முதலீடாகப் பார்க்கும் பலருக்கு இது உண்மையிலேயே முதலீடு செய்யச் சிறந்த நேரம். 2020ல் காலகட்டத்தில் தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் தங்கம் விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
வெள்ளி மீதான முதலீடு
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்தும் 70000 ரூபாய் விலையில் நிலைப்பெற்று வருகிறது. எனவே வெள்ளியை விடுத்துத் தங்கத்தில் முதலீடு செய்வது அதிக லாபத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications