தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தங்கம் விலை பெரிய சரிவை கண்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் விலை சரிந்து 13,390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 800 ரூபாய் விலை சரிந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,07,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திங்கள்கிழமை லேசாக விலை உயர்ந்த தங்கம் நேற்று, இன்று என இந்த இரண்டு நாட்களும் பெரிய சரிவை சந்தித்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் 80 ரூபாயும் இன்றும் 100 ரூபாயும் என இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 180 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் என பார்த்தால் 1440 ரூபாய் விலை சரிந்துள்ளது. 22 கேரட் தங்கம் இந்த மாதத்திலேயே இன்று தான் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்று கடைக்கு சென்றால் குறைந்த விலைக்கே தங்கம் வாங்கலாம். 24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,608 ரூபாய்க்கும் 10 கிராம் 1,46,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,970 ரூபாய்க்கும் ஒரு சவரன் 87,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று தடாலடியாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து 230 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை சரிந்து 2.30 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 6 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இன்று விலை சரிந்துள்ளது.
ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பணவீக்கம் , அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அறிவிப்பு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவை தான் தங்கம் விலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அக்டோபர் 27,28 ஆகிய தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடக்கிறது. இதில் வட்டி உயர்வு குறித்த சிக்னல்கள் இருக்கலாம் என்ற கணிப்பால முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டை கைவிட்டு பத்திரங்களின் பக்கம் செல்கின்றனர். இதனால் உலக சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4118 டாலர்களாக குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இறக்கம் தான் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

