சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக அமைந்திருக்க கூடிய சூழலில் பொதுமக்களுக்கு தங்கம் ஒரு நல்ல செய்தியை தந்திருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் மே இரண்டாம் தேதியான சனிக்கிழமை அன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 80 ரூபாய் விலை உயர்வு கண்டு 14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று விலைமாற்றம் இல்லை , திங்கட்கிழமையான நேற்றும் தங்கத்தின் விலை மாற்றப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 180 ரூபாய் விலை குறைந்து 13 ,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1440 ரூபாய் விலை சரிவடைந்திருக்கிறது .நேற்று 1,12,000 ரூபாய்க்கு விற்பனையாள ஒரு சவரன் தங்கம் இன்றைய தினம் 1,10,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1800 ரூபாய் விலை குறைந்து 1,38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 196 ரூபாய் விலை குறைந்து 15,777 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கத்தின் விலை 1960 ரூபாய் விலை குறைந்து 1,57,770 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,530 ரூபாய்க்கும் ஒரு சவரன் 92,240 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
தங்கத்தின் விலை குறைந்திருக்கக் கூடிய அதே வேளையில் வெள்ளியின் விலை இன்று சரிவடைந்திருக்கிறது. நேற்று 270 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று ஐந்து ரூபாய் விலை குறைந்து 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் விலை குறைந்துள்ள நிலையில் மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கம் வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

